செய்திகள் :

CJP: ``மாணவர்கள் செய்த தவறு என்ன? அமைதியான போராட்டத்தைக் கையாளும் முறை இதுவன்று" - டொவினோ கண்டனம்

post image

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest
cjp protest

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சரி, தவறு என்பது ஒப்பீட்டளவிலானதாக (சார்புடையதாக) இருக்கலாம். ஆனால், அமைதியான ஒரு போராட்டத்தைக் கையாளும் முறை நிச்சயமாக இதுவல்ல.

ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினர் தங்கள் குரலை எழுப்பும்போது, அந்தக் குரல்கள் அடக்குமுறை கொண்டு ஒடுக்கப்பட்டால், அங்கே மிதிக்கப்படுவது இந்தியாவின் எதிர்காலமே ஆகும். அங்கே சிறுகச் சிறுக வற்றிப்போவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே ஆகும். இந்த மாணவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்களா? வன்முறையில் ஈடுபட்டார்களா?

இந்த அளவுக்கு நடத்தப்படுவதற்கு அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? நம் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, ஒரு நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொரு நபருக்கும் என் முழுமனமார்ந்த ஆதரவை வழங்கி அவர்களோடு உறுதுணையாக நிற்கிறேன்.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

மாறுபட்ட கருத்துக்களைக் தெரிவிப்பதும், எதிர்ப்பைப் பதிவு செய்வதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; மாறாக, அதுவே ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இப்போது எனது தேசியப் பற்றைப் பற்றிக் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... உங்களை விட என்னை எனக்கு மிக நன்றாகவே தெரியும். இது அரசியல், மதம் மற்றும் மனிதர்களைப் பிரிக்கும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது. மனிதநேயமே என் அரசியல். அமைதியே என் நம்பிக்கை. ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

`ஆணாதிக்கமும் அதிகார மோகமும் லட்சியங்களைச் சிதைத்துவிட்டன'- AMMA-விலிருந்து ரேவதி, பத்மப்ரியா விலகல்

நடிகர் திலீப் மற்றும் சித்திக் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்குப் பிறகு, மலையாளத் திரைப்படத் துறை சங்கமான 'அம்மா' (A.M.M.A) அமைப்பின் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட முந்தைய நிர்வா... மேலும் பார்க்க

I Nobody: ``உலகளவில் பெண்களின் உரிமைகள் குறைந்து வருகின்றன" - நடிகை பார்வதி திருவொத்து

பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ, நோபடி' (I, Nobody) திரைப்படம் ஜூலை 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை ஒரு கொள்ளை சம்பவ பின்னணி க்ரைம் த்ரில்லர் என்று நினைத்து... மேலும் பார்க்க

Lissy: 'என் மகளுக்கு ரீல் அம்மாவாக...' - 38 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் லிசி!

38 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் நடிகை லிசி. அவர் இயக்கியிருக்கும் ஒரு புதிய விளம்பரப் படத்தில் லிசி நடித்திருக்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு மலையாளத்த... மேலும் பார்க்க

Mammootty: 1998-க்கு பிறகு, அடுத்த உயரிய விருது; பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்மூட்டி!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. 1971-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மம்மூட்டி, இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படங்களில் மலையாளம் மட்டுமல்ல... தமிழ், தெ... மேலும் பார்க்க

Balan Review: 'தாய் - மகனின் த்ரில்லர் போராட்டம்' - 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் படம் எப்படி?

`மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிதம்பரம் இயக்கத்தில் `ஆவேசம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜீத்து மாதவனின் எழுத்தில் உருவாகியிருக்கிறது பாலன... மேலும் பார்க்க

"மேலாளர் நீக்கம், ரூ.67 லட்சத்துக்கு கணக்கு இல்லை"- ‘அம்மா’ அமைப்பின் நிர்வாக்குழு ராஜினாமா பின்னணி!

கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான ‘அம்மா’வில் 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதை முறியடித்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் அமைந்த 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக் குழு பதவியேற்று 10 மாத... மேலும் பார்க்க