செய்திகள் :

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா

post image

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

இன்று மதியம் காக்ரோச் ஜனதா கட்சியுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக செயற்பாட்டாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா கலந்துகொண்டனர்.

பேரணி நடத்தும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள்
'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள்

இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் வைத்த...

> அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது,

> சமீபத்திய தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டன.

ஆனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் மட்டும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால், மத்திய அரசு, காக்ரோச் ஜனதா கட்சி இடையே நாளையும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இது குறித்து ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது...

"ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. அரசாங்கத்தின் சார்பாக நானும் என்னுடன் அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். அவர்களின் பேச்சுகளை நாங்கள் கேட்டோம்.

பேச்சுவார்த்தை சுமுகமான சூழலில் நடைபெற்றது மற்றும் பல கோணங்களில் அந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அவர்களின் முக்கியமான மூன்று கோரிக்கைகள் மற்றும் தேர்வுகளில் ஐந்து சீர்திருத்தங்கள் தொடர்பாக, நாங்கள் அவர்களிடம் நாளை பிற்பகலில் மீண்டும் உங்களைச் சந்திப்போம் என்று கூறியிருக்கிறோம்."

ஏற்கெனவே போராட்டக்காரர்களின் இரண்டு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலுக்கு மட்டும் மத்திய அரசு யோசனையில் இருக்கிறது.

"திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேச உரிமை உண்டு; ஆனால், திசை திருப்பக் கூடாது" - சீனு ராமசாமி

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நேற்று (ஜூலை 23), நீலம் மாணவர் இயக்கம் சார்பாக சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக... மேலும் பார்க்க

கோவை: `நீட் எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்த தமிழ்நாடு; ரத்து செய்யப்படும்வரை...'- இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உய... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்" - பாஜக அரசுக்கு CJP கடும் கண்டனம்!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, ``நீட் குளறுபடிகள் ... மேலும் பார்க்க

வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தர் மந்தர் பாணி திரள்! - சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்?

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழகத்திலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொ... மேலும் பார்க்க

களம் : தில்லி அதிரும் போராட்டங்கள் - 'ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்' | இரா.சிந்தன்

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க