செய்திகள் :

"Constable போதும்; என்னை பதவியிறக்கம் செய்யுங்கள்" - Sub Inspector பதவியைத் திரும்பியளித்த காவலர்

post image

அனைவரும் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று விரும்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் தனக்கு தனது பழைய கான்ஸ்டபிள் வேலையை மீண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கான்ஸ்டபிளாக மாறி இருக்கிறார்.

டெல்லியில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் மனீஷ். இவர் ஆரம்பத்தில் கான்ஸ்டபிளாகத்தான் பணியாற்றி வந்தார். மற்ற கான்ஸ்டபிள்களைப் போன்று இவரும் பதவி உயர்வுக்காக இலாகா மட்டத்தில் நடந்த தேர்வை எழுதினார்.

அத்தேர்வில் வெற்றி பெற்று சப் இன்ஸ்பெக்டராகவும் மாறிவிட்டார். ஆனால் சப் இன்ஸ்பெக்டராகி ஒரு சில மாதங்களில் அந்த வேலை மனீஷிக்குப் பிடிக்கவில்லை. கான்ஸ்டபிள் வேலை போன்று திருப்தியளிக்கவில்லை.

இதையடுத்து என்னை மீண்டும் கான்ஸ்டபிளாகப் பதவியிறக்கம் செய்யவேண்டும் என்று கோரி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.

அவர் தனது கடிதத்தில், "சார், நான் ஒரு கான்ஸ்டபிளாக நன்றாக இருந்தேன்.

தயவுசெய்து என்னை கான்ஸ்டபிளாக மாற்றவும். தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் நான் இந்த ரேங்கைப் பெற்றேன், ஆனால் நான் சப் இன்ஸ்பெக்டர் வேலையில் மகிழ்ச்சியாக இல்லை. எனது கான்ஸ்டபிள் வேலையில் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கோரிக்கையைப் பார்த்த உயர் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனாலும் அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மீது எதாவது விசாரணைகள், வழக்குகள், சஸ்பெண்ட்கள், பண பிரச்னை என்று எதாவது சிக்கல் இருக்கிறதா என்று விசாரிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில் மனீஷுக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலையைத் திரும்ப கொடுத்து இருக்கிறது காவல்துறை.

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் ... மேலும் பார்க்க

மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடும்பம் கடந்த மாதம் 25ம் தேதி இரவு உறவினர்களை அழைத்து தங்களது வீட்டில் விருந்து கொடுத்தனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர். அன்று இரவு விருந்தினர்கள் ... மேலும் பார்க்க

'கொலைக் குற்றவாளியுடன் பெண் ஜெயிலருக்கு காதல்!' - சிறை ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று நடந்த திருமணம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் சிறை அதிகாரியாக இருப்பவர் பெரோஷா. இப்பெண் ஜெயிலராக சிறையில் பணியாற்றியபோது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திரசிங் என்பவரைச் சந்தித்தார்... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்

இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போல... மேலும் பார்க்க

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க