செய்திகள் :

CSK : `இனி ஆட்டம் மாறும்!' - தயார் நிலையில் தோனி & `பேபி ஏபிடி' பிரெவிஸ்?

post image

ஐபிஎல் 2026 தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரும்ப வருகிறார் தோனி?

ஐந்து முறை சிஎஸ்கே-வுக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி, தசைப்பிடிப்பு காரணமாக இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.

தோனி
தோனி

அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானாலும், அணி நிர்வாகம் அவரது வருகையை அவசரப்படுத்த விரும்பவில்லை. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தோனிக்கு அடுத்த ஓரிரு நாட்களில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் அவர் தேர்ச்சி பெற்றால், சனிக்கிழமை டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "அவர் சரியான பாதையில் தான் இருக்கிறார். மெதுவாகக் குணமடைந்து வருகிறார். விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். சில சமயங்களில் காயம் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால், அவர் விரைவில் அணிக்குத் திரும்புவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ப்ரேவிஸ் வருகையும் உறுதி!

தென்னாப்பிரிக்காவின் 'பேபி ஏபிடி' என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரேவிஸ், விலாப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு அவர் அணியுடன் பயணம் செய்திருந்தாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ப்ரேவிஸின் வருகை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Dewald Brevis - டெவால்ட் பிரெவிஸ்
Dewald Brevis - டெவால்ட் பிரெவிஸ்

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் இதுபற்றி கூறுகையில், "அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என நம்புகிறோம். அடுத்த போட்டிக்கு ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது. நாங்கள் அவரது விஷயத்தில் சற்று நிதானமாகவே இருக்கிறோம். இந்த ஐந்து நாட்கள் திட்டமிட்டபடி சென்றால், அவர் விளையாடத் தயாராகிவிடுவார். அவர் இல்லாதது அணிக்குப் பெரிய இழப்பு. அவர் திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்" என்றார்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் சிஎஸ்கே அணிக்கு, அனுபவமிக்க ஃபினிஷரான தோனியின் வருகையும், அதிரடி வீரரான ப்ரேவிஸின் வருகையும் மிகப் பெரிய பலத்தைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இருவரின் வருகை, அணியின் வெற்றிப் பாதைக்குத் திருப்புமுனையாக அமையுமா என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்து அஷ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது இறுதி சீசன் ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்த ஒன்றாக இருந்தது என இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

RCB vs CSK: "நான் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றை(ஏப்ரல் 5) 11-வது லீக் போட்டியில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. முதலில்பேட்டிங்செய்த பெங்களூரு அணி, ட... மேலும் பார்க்க

RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" - வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு ச... மேலும் பார்க்க

RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" - ஆட்டநாயகன் டிம் டேவிட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கைத்... மேலும் பார்க்க

"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு ... மேலும் பார்க்க

GT vs RR: "பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியில் செய்தேன்.!"- ரவி பிஷ்னோய்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார... மேலும் பார்க்க