செய்திகள் :

Cyclone Ditwah: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! - `டிட்வா' புயல் எப்போது கரையை கடக்கும்?

post image

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா' (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதையடுத்து புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்' கொடுத்திருக்கும் வானிலை மையம், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 29,30) அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்திருக்கின்றன.

ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்
ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை துறை ஆணையருமான குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், ``முக்கியத் துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். அது 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இருக்கும் அடைப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும், பொதுப்பணித்துறை தேவையான மோட்டார் பம்ப் செட்டுகளை அந்தந்த கொம்யூனிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் தாழ்வான பகுதிகளில் தேவையான உணவுகளைத் தயார் செய்து தர தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்துறை தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேவையான ஜென்செட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன்
பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன்

தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறை முக்கிய நடைபாதைகளில் பொதுமக்கள் இரவு படுத்து தூங்குவதை இந்த மழை முடியும் வரை தவிர்க்க வேண்டும்.

மேலும், பாகூர், வில்லியனூரில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை தேவையான மருந்து மாத்திரைகளுடன் அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வ... மேலும் பார்க்க

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க