செய்திகள் :

D. Imman: "யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காம இருக்கு?" - பட விழாவில் டி. இமான்

post image

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துரோகம் பற்றியும், தேசிய விருது முடிவுகள் குறித்தும் டி. இமான் பேசியிருக்கிறார்.

Niram Movie
Niram Movie

அவர் பேசுகையில், "யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காம இருக்கு? எல்லாரோட வாழ்க்கையிலயும் அப்படி ஏதோ ஒரு சம்பவம் இருக்கத்தான் செய்யும். இந்தப் படத்துக்காகப் பாடலாசிரியர் பா. விஜய் ஒரு பாடலை எழுதியிருக்காரு. அந்த வரிகள் எனக்கு ரொம்பவே 'ரிலேட்' ஆச்சு.

அது எனக்கு மட்டும் இல்ல, அந்தப் பாடலைக் கேட்கும் அனைவராலும் அவங்க வாழ்க்கையில நடந்த ஏதோ ஒரு சம்பவத்தோட ஒத்துப்போகும். அதே வரி இயக்குநர், தயாரிப்பாளர்னு எல்லாருக்குமே கனெக்ட் ஆச்சு.

ஒரு படைப்பின் நோக்கமே எத்தனை பேருக்கு அது போய் சேருதுங்கிறதுதான். ஒரு பாடலின் வரி பலரோட உணர்வுகளோடு ஒத்துப் போகும்போது அது பெரிய சந்தோஷம்தான்" என்றவர், தேசிய விருது முடிவுகள் பற்றி, "இந்த பாட்டு, அந்த பாட்டுங்கறதெல்லாம் தாண்டி, தேசிய அளவில் நம்ம மாநிலத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குதுன்னா, அதை ஒட்டுமொத்த தமிழர்களோட வெற்றியாத்தான் பார்க்கணும்.

இமான்
இமான்

அதை நம்ம மாநிலத்தின் பெருமையா நினைச்சு சந்தோஷப்படணும். அதைவிட்டுட்டு, 'இது தகுதிதானா'ங்கற ஆய்வுக்குள்ள போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க