கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்; மீனவ மக்கள் சந்திப்பு; ஸ்டாலின் தேர்தல் பரப்புரை...
DC vs MI: "எங்களோட சக்சஸ் பார்முலா இதுதான்!" - என்ன சொல்கிறார் அக்சர் படேல்?
ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
163 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாகத் துரத்திய டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் அக்ஷர் படேல்: "டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்.
ஆடுகளத்தின் தன்மை மாறும்போது, அதற்கு ஏற்ப விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் இருப்பது கூடுதல் பலம். யாரையாவது திடீரென பேட்டிங் வரிசையில் முன்னால் இறக்கிவிடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடாது. அது ஒரு தந்திரமான நடவடிக்கை மட்டுமே. அது சரியாக அமைந்தால் வெற்றி நிச்சயம்.
சமீர் ரிஸ்வி மற்றும் ஆஷு என இருவருமே பயிற்சியின்போது மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளில் எந்த வீரர் தேவை என்பதைப் பொறுத்தே நாங்கள் முடிவு செய்கிறோம்.
இன்று ரிஸ்வி அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தார். யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனக்குள் வருவதே, எங்கள் அணியின் 'பெஞ்ச் ஸ்ட்ரென்த்' எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு கேப்டனாக இது ஒரு மகிழ்ச்சியான தலைவலிதான்.

கடந்த ஆண்டிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் என்னவென்றால், ஐபிஎல்-லில் ஒரு நேரத்தில் ஒரு போட்டியைப் பற்றி மட்டுமே சிந்திப்பது அவசியம். தொடர்ச்சியாக வெற்றி பெறும்போது அந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியம்.
இடையில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் கூட, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது கடினமாகிவிடும். எனவே, கடந்த காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதிய சவாலாகக் கருதி விளையாடுகிறோம். இந்த முறை அந்தத் தவறுகளைத் திரும்பச் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
















