BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா
Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

எங்கெல்லாம் கனமழை?
இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்யலாம்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யலாம்.
நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
HEAVY RAINFALL WARNINGS pic.twitter.com/CDEfJu1JXM
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 3, 2025



















