செய்திகள் :

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு... நிரந்தர தீர்வே கிடையாதா?

post image

Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார்

பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார்

 கால் ஆணி (Corns/Calluses) என்பது பாதங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் உராய்வினால் தோலின் மேல் அடுக்கு தடிமனாவதால் ஏற்படும்  பொதுவான பாதிப்பு. பொருத்தமற்ற காலணிகள் அணிவது, அதாவது மிகவும் இறுக்கமான, குறுகிய அல்லது தட்டையான காலணிகளை அணிவது, அதிக நடைப்பயிற்சி அல்லது நின்றுகொண்டே வேலை செய்வது, அதன் விளைவாக பாதங்களின் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக அழுத்தம் விழுவது,  பாத எலும்புகளின் அமைப்பில் பிறப்பிலேயே அல்லது விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் (Bone spurs), கரடுமுரடான தரையில் தொடர்ந்து வெறும் காலில் நடக்கும்போது தோல் தடிமனாவது போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். 

அடிக்கடி இந்தப் பிரச்னை ஏற்படும்போது, கடுமையான வலி இருக்கும் என்பதால் உங்களால் நடக்க முடியாது. அது உங்களுக்கு நிற்பதற்கும் நடப்பதற்கும் பெரும் சிரமத்தைக் கொடுக்கும். ஆனால், இதற்குத் தீர்வு என்பது பிளாஸ்டர் ஒட்டுவது அல்ல என்பதுதான் எதார்த்தமான உண்மை. முதலில் அந்த ஆணிக்காலை அகற்றுவதற்கான வழிமுறைகளைச் செய்வதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும். பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

பாதத்தின் அழுத்தத்தைக் குறைக்கும் பிரத்யேகக் காலணிகளைப் (Offloading footwear) பயன்படுத்த வேண்டும். அந்தக் காலணி, ஆணிக்கால் உள்ள இடத்தில் அழுத்தம் கொடுக்காதவாறு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பார்வையைச் சீரமைக்க நாம் எப்படித் தகுந்த கண்ணாடி அணிவதைப் பரிந்துரைக்கிறோமோ, அதேபோலத்தான் கால்களில் குறைபாடு அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கும் சரியான காலணிகள் நிச்சயம் தீர்வளிக்கும். உங்களது காலின் தன்மைக்கு ஏற்பவும், பாதத்தின் வடிவத்திற்கு ஏற்பவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) காலணிகளைத் தயாரித்து அணிய வேண்டும். கடைகளில் விற்கப்படும் ரெடிமேடு  காலணிகளை (Readymade footwear) அணிந்தால், இந்தப் பிரச்னை உங்களுக்கு நிரந்தரமாக குணமாகாமல், மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். மருத்துவரைச் சந்தித்து இது குறித்த மற்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது..."சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல... மேலும் பார்க்க

Doctor Vikatan: முழங்கால் வலி... மூட்டுத் தேய்மானம்... ஆபரேஷன் இல்லாமல் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது.முழங்கால் மூட்டுகளில் தேய்மானம் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதைச் சரி செய்ய முடியுமா?பதில் சொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்... வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan:எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த க... மேலும் பார்க்க

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல்.... ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா?

Doctor Vikatan: வீட்டில் ஒருவருக்கு நிமோனியா (Pneumonia) காய்ச்சல் வந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுமா... பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரை... மேலும் பார்க்க

கர்ப்பம் டு குழந்தை பிறப்பு: உதவும் தமிழக அரசின் 'சஞ்சீவி மகப்பேறு பெட்டகம்' - முழு விவரம்!

கர்ப்பம் - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல், மனம், ஹார்மோன், வளர்சிதை மாற்றம் என பல மாற்றங்கள் நிகழும் காலம். இந்தக் காலத்தில் தாயின் ஆரோக்கியமும், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் உறுதியாக இருக்... மேலும் பார்க்க