செய்திகள் :

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

post image

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா... குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாமா.... நல்லெண்ணெயை அப்படியே தலையில் தேய்த்துக் குளிப்பது சரியா அல்லது சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

நல்லெண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் (நெய் குளியல்) எடுக்கும்போது, அதனை கண்டிப்பாகச் சூடுபடுத்தித்தான் பயன்படுத்த வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும்கூட, எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.

குளிர் காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயை லேசாகச் சூடாக்கிப் பயன்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் அது தரும் குளிர்ச்சியை ஈடுகட்ட நிச்சயம் அப்படிச் செய்தாக வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறையான எண்ணெய்க் குளியலுக்கான அடிப்படையும்கூட.

புதிதாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தொடங்குபவர்கள், அப்படியே எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால் சளிப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் எண்ணெயைச் சூடுபடுத்திப் பயன்படுத்துமாறு சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

எண்ணெய் குளியல்

எண்ணெயைச் சூடுபடுத்தித் தேய்ப்பது உடலுக்கு இதத்தைத் தரும். உச்சந்தலையில் எண்ணெய் தேய்க்கும்போது, அந்தச் சூடு உடலின் வர்ம புள்ளிகளைத் தூண்டும் என்ற சித்த மருத்துவக் கருத்தின் அடிப்படையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டு நீராடுவதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்; எல்லோரும் எடுக்கலாமா?

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில் பிரபலமாகவும் பிரதானமாகவும் இருக்கிறது திரிபலா சூரணம். மலச்சிக்கல் முதல் வாய்ப் புண் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும்அதை எடுத்துக்கொள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளது. இதைக் குணப்படுத்த வாய்ப்புண்டா... எப்படிப்பட்ட சிகிச்சைகள் உதவும்?பதில் சொல்கிறார், சென்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

Doctor Vikatan:நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள் எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும்,'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கி... மேலும் பார்க்க

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது... பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர... மேலும் பார்க்க