செய்திகள் :

Doctor Vikatan: காலப்போக்கில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா கொழுப்பக்கட்டி?

post image

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நெற்றிப் பகுதியில் லேசான புடைப்பு போல வந்தது. சரியாகவே இல்லை.  மருத்துவரைப் பார்த்தபோது, அது  கொழுப்புக்கட்டி என்று சொன்னார். உடலில் கொழுப்புக் கட்டி ஏன் ஏற்படுகிறது... அது பிற்காலத்தில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

கொழுப்புக்கட்டிகள் (Lipomas) ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால், இது முக்கியமாக மரபணு ரீதியான பாதிப்புகள் மற்றும் கொழுப்பு செல்கள் அசாதாரணமாக, அளவுக்கு அதிகமாக வளர்வதோடு தொடர்புடையது. இவை புற்றுநோய் அல்லாத, பொதுவாக உடலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத கட்டிதான். கொழுப்புக்கட்டிகள் என்பவை சாதாரண கொழுப்பு வளர்ச்சியே தவிர, இவை ஒருபோதும் புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதில்லை.

சாதாரண கொழுப்புக்கட்டிகள் மென்மையாகவும், வலியற்றதாகவும், சருமத்துக்கு அடியில் தொட்டால் எளிதாக நகரக்கூடியதாகவும் இருக்கும். இருப்பினும்,  சில எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு பொது மருத்துவர் அல்லது  சரும மருத்துவரை (Dermatologist) அணுக வேண்டும். அவை...

வேகமான வளர்ச்சி: சில வாரங்கள் அல்லது மாதங்களில் கட்டியின் அளவு கணிசமாக அதிகரிப்பது.

வலி: கட்டியைத் தொடும்போது மென்மையாக மாறுவது அல்லது வலி ஏற்படுவது.

கட்டியின் தன்மையில் மாற்றம்: கட்டி மிகவும் கெட்டியாக, கடினமாக மாறுவது அல்லது ஒரே இடத்தில் நிலையாக நிற்பது (அழுத்தும்போது நகராமல் இருப்பது).

சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்: கட்டி இருக்கும் இடத்தின் மேல் உள்ள சருமப்பகுதியில் புண்கள், சிவந்து போதல் அல்லது அசாதாரணமான பள்ளங்கள்  ஏற்படுவது.

சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது.

கொழுப்புக்கட்டிகள் தானாகவே மறைந்துவிடாது. அவை சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது. உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சியால் சுருங்காது மற்றும் தானாகவே மறைந்தும் போகாது. பல கட்டிகள் ஒரே அளவிலேயே இருக்கும் என்றாலும், சில கட்டிகள் காலப்போக்கில் மெதுவாக வளரக்கூடும்.

இவை பாதிப்பில்லாதவை என்பதால், இவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது பொதுவாக அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இருப்பினும், கட்டி, வலியை ஏற்படுத்தினாலோ, உடலின் அசைவுகளைத் தடுத்தாலோ அல்லது தோற்றப் பொலிவைக் கெடுப்பதாக இருந்தாலோ அதனை அகற்றிவிடலாம்.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் என்பது மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள முறை. மயக்க மருந்து (anesthesia) அளித்து, கொழுப்புக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்படும். கொழுப்புக்கட்டிகள் மிகவும் சகஜமானவை. சராசரியாக 1,000 பேரில் ஒருவருக்கு கொழுப்புக்கட்டி உள்ளது. கொழுப்புக்கட்டிகள் பெரும்பாலும் 40 முதல் 60 வயதிற்குள் தோன்றும், ஆனால், அவை எந்த வயதிலும் வரலாம்.  பிறக்கும்போதே கூட  இருக்கலாம்.

கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் உருவாகலாம். அரிதான சந்தர்ப்பங்களில், கொழுப்புக்கட்டிகள் தசைகள், உள் உறுப்புகள் அல்லது மூளையில் கூட வளரக்கூடும். கொழுப்புக்கட்டி உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரே ஒரு கட்டி மட்டுமே இருக்கும், இருப்பினும் சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் வரவும் வாய்ப்புள்ளது.  கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என 
கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan:பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலே... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?பதில் சொல்கிறார் இங்க... மேலும் பார்க்க

எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் சமீபமாக கோடைக்காலத்திலும் இந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள்சொல்வதைக் கேட்கிறோம். தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சீயக்காயா... ஷாம்பூவா... தலைக்குக் குளிக்க ஏற்றது எது?

Doctor Vikatan: தலைக்குக் குளிக்க சீயக்காய்த் தூள்தான் சிறந்தது, காலங்காலமாக அதைத்தான் உபயோகித்து வந்தோம் என ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். சீயக்காய் எல்லாம் வேஸ்ட்... ஷாம்பூதான் பெஸ்ட் என்று சொல்கிறார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்பிரின் அலர்ஜி உள்ள இதய நோயாளிகளுக்கு மாற்று மருந்து உண்டா?

Doctor Vikatan: ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் குளோபிடோக்ரல் (Clopidogrel) மாத்திரைகள் இரண்டிற்கும் ஒவ்வாமை (Allergy) உள்ள நோயாளிகளுக்கு மாற்று மருந்துகள் என்ன?-m.mohamed Rafic, விகடன் இணையத்திலிருந்து ப... மேலும் பார்க்க