செய்திகள் :

Doctor Vikatan: ஜெல் டூத்பேஸ்ட் ஆரோக்கியமானதா: இனிப்பான டூத்பேஸ்ட் சர்க்கரையை அதிகரிக்குமா?

post image

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டில் ஜெல் வடிவ டியூப்கள் நிறைய வருகின்றன. கண்களைப் பறிக்கும் நிறத்தில் அவற்றைப் பார்த்ததுமே உபயோகிக்கத் தோன்றுகிறது. வழக்கமான வெள்ளை நிற பேஸ்ட் அல்லது கலர்கலரான ஜெல்... இரண்டில் பற்களுக்கு ஆரோக்கியமானது எது... சில டூத் பேஸ்ட், ஜெல்களில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கிறதே... நீரிழிவு உள்ளவர்களுக்கு அது ரத்தச் சர்க்கரை அளவை அதிகப்படுத்துமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி  

பல் மருத்துவர் மரியம் சஃபி

டூத் பேஸ்ட்டா, டூத் ஜெல்லா என்று கேட்டால், பேஸ்ட்தான் சிறந்தது. அதன் சுத்தப்படுத்தும் திறன் ஜெல்லைவிட சிறந்ததாக இருக்கும். பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும்.  பளபளப்பான கிரிஸ்டல்  துகள்கள் சேர்த்தாலும், மின்ட் போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுவதாலும்  டூத் ஜெல் என்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது. 

ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம் மற்றும் பல் பிரச்னைகளைப் பொறுத்து அ வருக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் சரியாக இருக்கும் என்பதை பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.  குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எளிதில் சொத்தைப் பல் பிரச்னை வரும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கு ஃப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பரிந்துரைப்பார்.  அதுவே வயதானவர்களுக்கும், நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும், பல் கூச்சம் பிரச்னை உள்ளவர்களுக்கும்  பொட்டாசியம் நைட்ரேட் (Potassium nitrate)  அல்லது ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு (Strontium Chloride)  உள்ள டூத் பேஸ்ட்டுகளை பரிந்துரைப்பார். எனவே ஒரு டூத் பேஸ்ட் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. 

தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்.

பொதுவாக டூத் பேஸ்ட்டுகளில் மற்ற சேர்க்கைகளின் வீரியத்தை மட்டுப்படுத்துமபடிதான் சார்பிட்டால் (Sorbitol) என்பதைச் சேர்ப்பார்கள். இது டூத் பேஸ்ட்டுகளில் ப்ரிசர்வேட்டிவ்வாகவும் இனிப்பூட்டியாகவும்  பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்பட்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடாது.  டூத் பேஸ்ட்டோ, மவுத் வாஷோ உபயோகித்ததும் வாய்க் கொப்பளித்துத் துப்பிவிடுவோம். எனவே. அது உடலுக்குள் போக வாய்ப்பில்லை. ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகரிக்க வாய்ப்பில்லை.  எந்த பேஸ்ட் சிறந்தது என்பதைவிட முக்கியமானது நீங்கள் எப்படி உங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிக்கிறீர்கள் என்பது. தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பலவீனமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி பலவீனமாக வாய்ப்பு உண்டா? அப்படி கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருந்தால், தையல் (Cervical Stitch) போடுவது எப்போது அவசியம்...இது குழந்தையை பாதிக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால், கை,கால் குடைச்சல் வருமா?

Doctor Vikatan:மரவள்ளிக்கிழங்கை எல்லோரும் சாப்பிடலாமா... சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கை, கால் குடைச்சல் வருமா?பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச்சேர்ந்த அரசு சித்த மருத்துவர்ராஜம்சித்த மருத்த... மேலும் பார்க்க

`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?

"கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் ‘ice dunk’ சீக்ரெட்; சருமத்தைப் பளபளப்பாக்குமா?

Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ரா தன் முகத்தின்வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தைப் பளபளப்பாக்கவும் ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீரில் முகத்தை நனைக்கும் 'ஐஸ் டங்க்' (ice dunk’) முறையைப் பின்பற்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முதுகில் ஏற்பட்ட திடீர் வீக்கம்... புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா?!

Doctor Vikatan: என்நண்பனுக்கு 42 வயதாகிறது. அவனுக்கு கடந்த சில மாதங்களாக முதுகுப் பகுதியில் ஒருவித வீக்கம் தென்படுகிறது. அதில் அரிப்போ, எரிச்சலோ இல்லை என்கிறான். கூகுள் செய்து பார்த்தபோது, வீக்கம் என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெளியே தொங்கும் காப்பர் டி நூல்... ஆபத்தா, அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan:நான் 2 வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்திக்கொண்டேன். கடந்த சில மாதங்களாக அதன் நூல் வெளியே வந்தது போல உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு உண்டா... இதை எப்படி சரிசெய்ய வேண்டும்? அகற்றிவிட்ட... மேலும் பார்க்க