செய்திகள் :

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

post image

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்பது போல நிறைய வீடியோக்கள் பார்க்கிறேன். அப்படி ஏதேனும் செய்து உடனடியாக முடி உதிர்வை நிறுத்த முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்  

சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

'இதைச் செய்தால் ஒரே வாரத்தில் முடி கொட்டுவதை நிறுத்த முடியும்' என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பலரும் பல ரீல்ஸ் வெளியிடுவதைப் பார்க்கிறோம். அப்படி ஒரே வாரத்தில் முடி கொட்டுவதை நிறுத்த முடியும் என்று யாராவது சொன்னால் தயவுசெய்து அதை நம்பாதீர்கள். முடி உதிர்வு தீவிரமாக இருக்கும்போது, அதை ஏழு நாள்களில் முழுமையாக நிறுத்த முடியாது. முடி கொட்டுவது என்பது ஒரு நோயல்ல, அது உடலில் ஏற்படும் ஏதோ ஒரு நோயின் அல்லது குறைபாட்டின் அறிகுறி என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

தீவிரமான முடி உதிர்தலுக்கு உடல்ரீதியான  அல்லது மனரீதியான பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். சத்துக்குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவை உங்கள் உடலை பாதிக்கின்றன. உங்கள் உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களின் விளைவாகவே உங்களுக்குக் கடுமையான முடி உதிர்தல் ஏற்படுகிறது. எனவே, முடி கொட்டுதல் பிரச்னை இருந்தால், உடனடித் தீர்வுகளுக்குப் பின்னால் ஓடாமல், உண்மையான காரணம் என்னவென்று ஆராய வேண்டும். அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், அதன் மூல காரணத்திற்குச் சிகிச்சை அளிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். 

நீங்கள் தற்காலிகமாக ஏதேனும் சிகிச்சைகள் அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்தி முடி உதிர்தலை நிறுத்தினால், அவற்றை நிறுத்தியவுடன் முடி உதிர்தல் மீண்டும் தொடங்கிவிடும்.  முடிக்கு மேலும் மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் முக்கியமான சில வழிமுறைகள் உள்ளன.

முடி உதிர்வுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், தங்களுக்கு அதிக முடி கொட்டுவதை எண்ணி படும் கவலையே (மன அழுத்தம்) முடி கொட்டுவதை மேலும் அதிகரிக்கிறது.

1. முடி உதிர்வுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், தங்களுக்கு அதிக முடி கொட்டுவதை எண்ணி படும் கவலையே (மன அழுத்தம்) முடி கொட்டுவதை மேலும் அதிகரிக்கிறது. எனவே, மன அழுத்தத்தால் முடி உதிர்தல் பிரச்னையை எதிர்கொள்பவர்களிடம் 'உங்களுக்குச் சரியாகிவிடும்' என்று உறுதி அளித்து நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். இது உடலில் உள்ள கார்டிசால் (Cortisol)  ஹார்மோன் அளவைக் குறைத்து, முடி உதிர்தலைப் படிப்படியாகக் குறைக்க உதவும்.

2. அடிக்கடி முடிக்கு கலரிங் செய்தல் (Coloring), ஸ்ட்ரெயிட்டனிங் செய்தல் (Straightening) போன்ற ரசாயன சிகிச்சைகளைச் செய்பவர்கள், அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். 

3. தலைமுடிக்கு ஏற்ற மைல்டான ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். ஈரமான முடியை வேகமாகச் சீவுவதைத் தவிர்க்க வேண்டும். 

4. முடியை வாருவதற்கு முன் விரல்களால் சிக்கெடுத்து, பிறகு அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்த வேண்டும்.
புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. தினமும் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

6. 100 கிராம் கற்றாழை ஜெல்லுடன் (Aloe vera gel), 10 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 சொட்டுகள் டீ ட்ரீ (Tea tree) எண்ணெய், 10 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் மற்றும் 10 சொட்டுகள் பாதாம் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். எசென்ஷியல் ஆயில் எனப்படும் இவ்வகை  எண்ணெய்களை நேரடியாகத் தலையில் தடவக்கூடாது, கற்றாழை போன்ற ஒன்றுடன் கலந்தே பயன்படுத்த வேண்டும். இந்தக் கலவையை தினமும் தலையில் தடவலாம். 

7. தலையில் வேகமாக மசாஜ் செய்ய வேண்டாம், ஏனெனில் அது முடியின் வேர்களை பலவீனமாக்கி அதிக அளவில் முடியை உதிரச் செய்யும்.

தலையில் வேகமாக மசாஜ் செய்ய வேண்டாம், ஏனெனில் அது முடியின் வேர்களை பலவீனமாக்கி அதிக அளவில் முடியை உதிரச் செய்யும்.

8. ஒரு ஆப்பிள், ஒரு கேரட், கால் பங்கு பீட்ரூட், 4 பேரீச்சம்பழம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு  நெல்லிக்காய் மற்றும் சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துச் சாறு எடுத்து தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கவும். இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 9. 200 மில்லி தேனில் பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள், வால்நட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு வாரம் நிழலில் ஊற வைத்துச் சாப்பிடலாம்.

10. இவை அனைத்தையும் செய்த பிறகும் முடி உதிர்தல் நிற்கவில்லை என்றால், நீங்கள் கூந்தல் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளக்கும் மருத்துவரை (Trichologist) அணுக வேண்டும். சில நேரங்களில் இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு பிரச்னை, சமீபத்திய உடல்நல பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், பொடுகு அல்லது பரம்பரைத் தன்மை காரணமாகவும் முடி கொட்டலாம். முறையான பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வைத் தரும்.

டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். சருமம், கூந்தல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒன்றிணைந்த சிகிச்சைகள் மூலம் தீர்வுகள் அளிப்பவர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க மு... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்குஅக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்கிறார்கள் ச... மேலும் பார்க்க