செய்திகள் :

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

post image

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் பரிந்துரைத்தார். அறுவை சிகிச்சை என்றதுமே பயந்துபோய், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், அதே சிகிச்சையைச் செய்துகொண்ட செய்தியைப் பார்த்தேன். இது விளையாட்டு வீரர்கள், ஸ்டன்ட்டில் ஈடுபடுவோருக்கான சிகிச்சைதானே.... இந்த அறுவை சிகிச்சை எனக்கு வலியிலிருந்து நிவாரணம் தருமா... சாதாரண அறுவை சிகிச்சைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி.

எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி

``நடிகர் ஜூனியர் என்டிஆருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால்,  அவருக்கு ஆர்த்தோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு கொண்டிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தியும் வந்தது. நீங்கள் நினைக்கிற மாதிரி இது விளையாட்டு வீரர்களும், ஸ்டன்ட் செய்யும் நடிகர்களும் மட்டுமே செய்து கொள்கிற சிகிச்சை அல்ல. சாமானியர்களுக்கும் செய்யப்படுவதுதான்.

விளையாட்டுகளின் போதும், நடிகர்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளின் போதும் ஏற்படும் திடீர் திருப்பங்கள், பலமான மோதல்கள் மற்றும் ஒரே அசைவை மீண்டும் மீண்டும் செய்வதால் அவர்களின் தசைநார்கள் (ligaments) மற்றும் குருத்தெலும்புகள் (cartilage) சேதமடைவதால், இவர்களில் பலரும் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வார்கள்.

ஆனால்,  படிகளில் ஏறும்போது திடீரென முழங்கால்  லாக் ஆவது, தோள்பட்டை வலி காரணமாக அலமாரியில் கையை நீட்டிப் பொருள்களை எடுக்க முடியாமல் போகும் நிலை, அல்லது அடிக்கடி பிடிப்பு தளர்ந்து நிலைதடுமாறும் மூட்டுகள் போன்றவை விளையாட்டு வீரர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே ஏற்படுபவை அல்ல. 

தோள்பட்டை

போதுமான அளவு ஓய்வு எடுத்தும், பிசியோதெரபி அல்லது மருந்துகள் எடுத்தும் மூட்டு வலி, தோள்பட்டை வலி குறையாத நிலையில்,  பரிசோதனையில் சரிசெய்யக்கூடிய கட்டமைப்புப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையைச் செய்யலாம்.

ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது, உடலைப் பெரியளவில் கிழிக்காமல் சிறிய துளைகள் வழியாகவே மூட்டுகளின் காயங்களைச் சரிசெய்யும் நவீன சிகிச்சை முறையாகும். இதில் 'ஆர்த்ரோஸ்கோப்' எனப்படும் சிறிய கேமராவைத் துளை வழியாக உள்ளே அனுப்பி, மூட்டின் உட்பகுதியைத் திரையில் தெளிவாகப் பார்த்துக்கொண்டே, பிரத்யேகக் கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களைச் சீரமைக்கிறோம். முக்கியமாக, முழங்கால் மற்றும் தோள்பட்டை மூட்டுகளுக்குச் செய்யப்படும் இந்தச் சிகிச்சையை, இடுப்பு, கணுக்கால், முழங்கை மற்றும் மணிக்கட்டு போன்ற பிற மூட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

சிறிய வெட்டுகள் மட்டுமே  இருக்கும் என்பதால் திசு சேதம், வலி மற்றும் கிருமித்தொற்று அபாயம் குறைவதோடு, நோயாளிகள் விரைவாக குணமடைந்து அன்றாட வேலைகளுக்குத் திரும்ப முடியும். ஆனாலும், நோயாளியின் பாதிப்பைப் பொறுத்தே இதைத் தேர்வு செய்ய முடியுமே தவிர, எல்லாச் சூழல்களிலும் எல்லோருக்கும்  இது வழக்கமாகச் செய்யப்படும் ஓப்பன் சர்ஜரிக்கு மாற்றாகாது.     

அடிப்படைப் பராமரிப்புக்குப் பிறகும் 4 முதல் 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வலி அல்லது வீக்கம், அல்லது மூட்டு சிக்கிக்கொள்வது, நிலைதடுமாறுவது போன்ற  அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். 

பரிசோதனைகளுக்குப் பிறகு பிசியோதெரபி, ஊசிகள் என அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகளே முதலில் பரிந்துரைக்கப்படும்.

பரிசோதனைகளுக்குப் பிறகு பிசியோதெரபி, ஊசிகள் என அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகளே முதலில் பரிந்துரைக்கப்படும்.  தானாகக் குணமடையாத தசைநார் கிழிசல்களுக்கு மட்டுமே ஆர்த்ரோஸ்கோபி செய்யப்படும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான பிசியோதெரபி மற்றும்  மறுவாழ்வுப் பயிற்சிகள் (Physiotherapy & Rehabilitation) மூலம், மூட்டின் முழு பலத்தையும் இயல்புநிலையையும் மீட்டெடுக்கலாம்.

வலி தாங்க முடியாத அளவுக்கு மாறும் வரை காத்திருக்க வேண்டாம். ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகினால், அறுவைசிகிச்சை இல்லாத எளிமையான முறையிலேயே பாதிப்பைச் சரிசெய்து கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. மூட்டுப் பிரச்னைகளை அலட்சியப்படுத்தினால், அது சுற்றியுள்ள பிற திசுக்களையும் சேதப்படுத்தும்.  பாதிப்பையும் தீவிரப்படுத்தும்.

டாக்டர் வீரபாகு முத்துசாமி:

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராகப்  பணிபுரிபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை, விளையாட்டுக் காயங்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிக்கலான எலும்பியல் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க மு... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்குஅக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்கிறார்கள் ச... மேலும் பார்க்க

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.தாய்ப்பால் ... மேலும் பார்க்க