செய்திகள் :

Doctor Vikatan: பால் குடித்தால் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வருமா?

post image

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவள் என்பதால் நான் கால்சியம் தேவைக்கு பால் அதிகம் எடுத்துக்கொள்வேன்.

இந்நிலையில் சமீபத்தில் என்னைப் பரிசோதித்த மருத்துவர், பால் அதிகம் எடுப்பதுதான் அனீமியாவுக்குக் காரணம் என்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒரு பக்கம் அனீமியா.. இன்னொரு பக்கம் கால்சியம் தேவை... இரண்டையும் எப்படி சமாளிப்பது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும், பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பால், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். உதாரணத்துக்கு, இன்று பலரும் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் சிரப்பை (Iron Dates Syrup) பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உண்மையில், இந்த காம்போ தவறானது. இரும்புச்சத்தும், கால்சியமும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடியவை அல்ல.

இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்பட வேண்டுமானால், அதை வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, நெல்லிக்காய் அல்லது எலுமிச்சைப்பழச் சாறுடன் இரும்புச்சத்து உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கால்சியம் தேவைக்குக் கட்டாயம் பால் குடிக்கலாம். ஆனால், அத்துடன் இரும்புச்சத்துள்ள உணவைச் சேர்த்து எடுப்பதைத் தவிர்க்கலாம். 

உதாரணத்துக்கு, கீரை மற்றும் தயிர் சாதம் சாப்பிடுவதாக இருந்தால், கீரை சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தயிர் சாதம் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர் என்றால், இரண்டையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது.

இரும்புச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட உடனேயே தேநீர் (Tea) அல்லது காபி (Coffee) குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்தப் பழக்கமும்,  இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை பெருமளவு தடுக்கும்.  

நீங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர் என்றால், இரண்டையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது.

மருத்துவரிடம் கேட்டு அவர் அறிவுறுத்தும் இடைவெளி விட்டு எடுப்பதுதான் பலன் தரும். பசலைக்கீரை போன்ற அனைத்து வகையான கீரைகளிலும், சிறுதானியங்களிலும் (Millets) இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகிய இரண்டுமே இயற்கையாகவே நிறைந்துள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளைத் தனித்தனியாகவோ அல்லது போதிய இடைவெளி விட்டோ எடுத்துக்கொள்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பிசிஓடி பிரச்னை இருந்தால் குழந்தை பிறக்காதா... நிரந்தர தீர்வே கிடையாதா?!

Doctor Vikatan:பிசிஓடி பிரச்னைக்குத் தீர்வே இல்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா... பிசிஓடி இருந்தால் குழந்தை பிறக்காது என்ற தகவலும் உண்மையா... மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இந்தப் பிரச்னைக்கு வேறு... மேலும் பார்க்க

Doctor Vikatan: பரவும் ஹன்டா வைரஸ்... கோவிட் தொற்றைவிட ஆபத்தானது என்கிறார்களே, உண்மையா?

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் ஹன்டாவைரஸ் தொற்று பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இது கோவிட் வைரஸைவிட வீரியமானது என்றும், கொரோனா தொற்றையே மிஞ்சும் அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆளாளுக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்... ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே.... டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சம்மர்: நீரிழிவு பாதித்தவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் என் கணவருக்கும் நீரிழிவு இருக்கிறது. நாங்களும் ஆசைப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விடுகிறோம். நீரிழிவு உள்ளவர்கள் இப... மேலும் பார்க்க

Doctor Vikatan: குதிகால் வலிக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 49. எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் இடது குதிகாலில் வலி வந்தது. அதற்கு நிறைய ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டேன். ஆனால், சரியாகவில்லை. இப்போது இன்னொரு குதிகாலிலும் வலி ஆரம்பித்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கர்ப்பம் கூடாதா, ஐவிஎஃப் சிகிச்சை செய்யக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இப்போதுதான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். இந்நிலையில் கோடைக்காலத்தில் ஐ... மேலும் பார்க்க