செய்திகள் :

Doctor Vikatan: வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா?

post image

Doctor Vikatan: வலியினால் ஒருவருக்கு  தற்காலிக மயக்கம்  ஏற்படுமா... சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டு வந்த என் உறவினர், வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவர் திடீரென மயக்கமாகிவிட்டார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, வலியால் ஏற்பட்ட தற்காலிக மயக்கம்தான் என்றார்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

மருத்துவ ரீதியாக இதை 'வாசோவாகல் சின்கோப்' (Vasovagal Syncope) அல்லது 'பெயின் இன்டியூஸ்டு சின்கோப்' (Pain-induced Syncope) என்று சொல்வோம். அதாவது, உடலில் ஏற்படும் அதீத வலியினால் உண்டாகும் தற்காலிக மயக்க நிலை இது.

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம்.

அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் சில நொடிகள் குறைவதால், தற்காலிக மயக்கம், பேச முடியாமை, உடல் தளர்ச்சி மற்றும் வியர்வை போன்றவை ஏற்படுகின்றன.

படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும்.

இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கால்களைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்து, அதன் பின்பே நிதானமாக எழுந்து நடக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த பாதுகாப்பான வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி வலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய ஓய்வும், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் அவசியம்.

இது தற்காலிகமான பாதிப்பு என்பதால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், இது போன்ற அறிகுறிகள் முதன்முறை ஏற்படும்போது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால், மூளைக்கான ஸ்கேன் (Brain Scan) செய்ய அறிவுறுத்துவார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?

Doctor Vikatan: என் கணவருக்கு கடந்த 4 வருடங்களாகசர்க்கரைநோய்இருக்கிறது. இந்நிலையில் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?

Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றைதினமும் மூன்று வேளை சம... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்... இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா.... ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா?

Doctor Vikatan:உப்பை அறவே தவிர்க்கும் உணவுப்பழக்கத்தை இன்று பலர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படி அறவே உப்பைத் தவிர்ப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே போல சர்க்கரையை அறவே தவிர்க்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும... மேலும் பார்க்க