செய்திகள் :

Doctor Vikatan: `அடிக்கடி முடியை வெட்டிவிட்டால்தான், தலைமுடி ஆரோக்கியமாக வளரும்' என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி, மாதம் ஒருமுறை தானாகவே தன் முடியின் நுனிகளை வெட்டிவிடுவாள். அப்படி வெட்டினால்தான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை. வெட்ட, வெட்ட முடி வளர்ச்சி அதிகரிக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.

 கீதா அஷோக்
கீதா அஷோக்

முடியை அடிக்கடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, குறைந்தபட்சம் அரை அங்குலம் அளவுக்காவது முடியின் நுனியை ட்ரிம் (Trim) செய்வது நல்லது.

பொதுவாக, முடியின் நுனிப் பகுதி அல்லது அடிப்பாகம் பலவீனமாக இருக்கும். தலையில் உள்ள முடி அடர்த்தி நுனியில் இருக்காது. நுனிப்பகுதியில் பிளவுபட்ட முடிகள் (Split Ends), முடி வளைதல் மற்றும் அடர்த்திக் குறைவு ஆகியவை இருக்கும்.

நான்கு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனியை மட்டும் ட்ரிம் செய்யலாம். எப்போதுமே, மேலிருந்து, அதாவது வேரிலிருந்துதான் முடி வளரும். அது கீழிருந்து வளர்வதில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நுனிகள் பலவீனமாக, உடைந்த பிளவுகளுடன் இருப்பதை  'புரோக்கன் எண்ட்ஸ்' (Broken Ends) என்று சொல்வோம். அப்படி பிளவுபட்டு, உடைந்து போனால், அதை மறுபடி சரிசெய்ய முடியாது.

மண்டைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, கூந்தல் நுனிகளை அவ்வப்போது லேசாக வெட்டிவிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.
ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

சிலருடைய முடி அமைப்பைப் பார்த்தால், தலையில் அடர்த்தி அதிகமாக இருக்கும். கீழே உள்ள முடியானது குச்சிபோல மெலிந்து இருக்கும். முடியின் நுனிகள் பிளவுபட்டு பாதிக்கப்படுவதுதான் காரணம்.

ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை  சலூன் சென்று முடியை வெட்டிக்கொள்வதால், அவர்களுக்கு முடியின் நுனிகள் வெடிப்பது 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது.

மிக அரிதாக, அளவுக்கதிகமாக முடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம்.  எனவே, முடியை வெட்டுவதைவிட, நுனியை மட்டும் ட்ரிம் செய்வது ஆரோக்கியமானது. இது  ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர்!

``அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில்சிலர்,வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர்.அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான வேலைகளைச்செய்தாலும் பிரச்னை தீவிரமாகும். இந்நிலையில், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாக்கிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளைச் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்நண்பனுக்கு சமீபத்தில் ஓர் அறுவைசிகிச்சைநடந்தது. உடலளவில் ரொம்பவும் சோர்வாக இருக்கிறான். அதனால் அவனைஅசைவ உணவுகள் சாப்பிடச் சொல்லி அட்வைஸ் செய்தேன். ஆனால், அவனோ, அறுவை சிகிச்சைக்குப் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

Doctor Vikatan: என்நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோபச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானத... மேலும் பார்க்க

உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? கண்டறிந்து, மீள்வது எப்படி?

இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பிரச்னையாகவும் சவாலாகவும் இருப்பது போதைப்பழக்கம்தான். 'இது போதை' என்று தெரிந்தே சிக்குபவர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் 'இவையெல்லாமும்கூட போதை தான்' என்று தெர... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பார்த்தேன். வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டுமறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும், பிசிஓடி எனப்ப... மேலும் பார்க்க