சேலம் மரபுச்சந்தை: 'நம் தலைமுறைக்கு மரபு சார்ந்த அறிவைக் கடத்தும் முயற்சியே இது'...
DRA: கலிபோர்னியாவின் ஸ்லேட் AI தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் டிஆர்ஏ நிறுவனம்!
வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், புதுமைகளை புகுத்துவதிலும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்துடன் இணைந்து இன்று ஒரு முக்கிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, தங்களது கட்டுமானப் பணிகளில் 'ஸ்லேட் ஏஐ' என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெருமையை டிஆர்ஏ பெறுகிறது.
கட்டுமானப் பணிகள் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறி வரும் நிலையில், பழைய முறைகளை மாற்றி ஏஐ தொழில்நுட்பம் மூலம் பணிகளைச் சுலபமாகச் செய்ய ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் உதவுகிறது. இதன் மூலம் பணிகளின் வேகம் அதிகரிக்கும் மற்றும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மேலும், திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்பதோடு, அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் வெகுவாக குறைக்க முடியும்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். திட்ட மேலாண்மை, தரப் பரிசோதனை, கட்டுமான தளக் கண்காணிப்பு, பொருட்கள் கொள்முதல், தொழிலாளர்களின் திறன், பாதுகாப்பு, தாமதங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு உடனுக்குடன் முடிவெடுப்பது போன்ற முக்கியப் பணிகளில் டிஆர்ஏ நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த உள்ளது. இது பணிகளின் தரத்தையும் திட்டத்தின் நேரத்தையும் இணைப்பதால், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடித்து, விரைவாகத் தீர்க்க முடியும்.
தற்போது சென்னையில் உள்ள டிஆர்ஏ நிறுவனத்தின் திட்டங்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 33 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகளுக்கும், அங்கு வேலை செய்யும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் உதவியாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் தரமான வீடுகளை வழங்குவதில் தங்களது நற்பெயரை மேலும் வலுப்படுத்த டிஆர்ஏ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்லேட் ஏஐ பல மொழிகளில் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் பல மொழிகள் பேசும் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதால், அவர்கள் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
ரியல் எஸ்டேட் துறையிலேயே முதல்முறையாக நடைபெறும் இந்தக் கூட்டணி குறித்து டிஆர்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்ரஞ்சித் ரத்தோர் கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரை, புதிய கண்டுபிடிப்புகள் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். ஸ்லேட் நிறுவனத்துடனான இந்தக் கூட்டணியை, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய தொடக்கமாகவே (கன்ஸ்டரக்ஷன் 2.0) நான் பார்க்கிறேன். தொழில்நுட்பம், பல மொழிகளில் தொடர்புகொள்ளும் வசதி, முன்கூட்டியே கணிக்கும் திறன் மற்றும் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்து, தரமான வீடுகளை குறித்த நேரத்தில் வழங்க இது உதவும். நாங்கள் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில், எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு எப்போதும் முக்கியமான ஒன்றாகும்" என்றார்.
இந்த கூட்டணி குறித்து ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஏஐ பிரிவின் தலைவர் செந்தில் குமார் பேசுகையில், "கட்டுமானத் துறையில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இதில் உள்ள சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பழைய முறைகள் மட்டுமே போதாது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பணிகளைச் செய்து, விரைவான முடிவுகளை எடுக்கவும், திட்டத்தை முன்கூட்டியே கணித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கவும் டிஆர்ஏ நிறுவனத்துடன் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று கூறினார்.
டிஆர்ஏ நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், இதுபோன்ற சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, நிறுவனத்தின் சீரான வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற பணிகளைச் செய்யும் திறன் ஆகியவற்றின் மீதான நீண்டகாலக் கவனத்தைக் காட்டுகிறது.

மேலும், இந்தக் கூட்டணியானது ஸ்லேட் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவையும் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது.
டிஆர்ஏ நிறுவனம் பற்றி: 40ஆண்டுகால சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்ட டிஆர்ஏ நிறுவனம், சென்னை முழுவதும் உலகத் தரம் வாய்ந்த திட்டங்களை வழங்கி, ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பெயராக மாறியுள்ளது. 12,000-க்கும் மேற்பட்ட திருப்தியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் திட்டங்களை வழங்குதல் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோர் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதோடு நின்றுவிடாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு 'பெருமைமிகு இல்லத்தை' வழங்குகிறது. திட்டத்தின் நிலையை அறிய 'டைம்லைன் மீட்டர்' மற்றும் 'வாடிக்கையாளர் மகிழ்ச்சி மீட்டர்' போன்ற புதிய முயற்சிகள், வாடிக்கையாளர்களின் திருப்தியின் மீது அவர்கள் வைத்துள்ள உறுதியான கவனத்தைக் காட்டுகின்றன.
மேலும், இவர்களின் ஆன்லைன் தளம், வாடிக்கையாளர்கள் திட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்களை எவ்வித சிரமமுமின்றி எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. டி.ஆர்.ஏ பிரிஸ்டின் பெவிலியன், டக்ஸிடோ, அஸ்காட், ஸ்கைலான்டிஸ், எலைட், இன்பினிக் போன்ற இவர்களின் முக்கியத் திட்டங்கள், நவீனத்துவத்துடன் மதிப்புமிக்க முதலீடுகளை வழங்குவதில் இவர்களின் அர்ப்பணிப்புக்குச் சான்றாக உள்ளன. FICCI-இன் REISA மற்றும் டைம்ஸ் பிசினஸ் விருதுகளைப் பெற்றுள்ள டிஆர்ஏ நிறுவனம், CRISIL நிறுவனத்தின் '7-நட்சத்திர தரமதிப்பீட்டை' பெற்ற சென்னையின் முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. குளங்களைச் சீரமைத்தல் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல் போன்ற இவர்களின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள், சமுதாயத்தின் மீதான இவர்களின் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன. "காலத்தால் அழியாத வீடுகள், குறித்த நேரத்தில் வழங்குதல்" என்ற தங்களின் குறிக்கோளைப் பின்பற்றி, தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பெருமையையும் நம்பிக்கையையும் ஊட்டி, கனவுகளை நிரந்தரமான நற்பெயராக மாற்றுவதை டிஆர்ஏ தொடர்ந்து செய்து வருகிறது.
ஸ்லேட் டெக்னாலஜிஸ்: கட்டுமான உலகிற்கான நுண்ணறிவுத் தளம்: சிலிக்கான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்லேட் டெக்னாலஜிஸ், கட்டமைப்பு, பொறியியல் மற்றும் கட்டுமானத் துறைக்கு அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவைக் கொண்டுவரும் ஒரு நிறுவனமாகும். அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய துறையான கட்டுமானத் துறைக்கான நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கி வருகிறது. உலகின் கட்டிடங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் நகரங்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன என்பதை மாற்றியமைக்கும் ஏஐ அடிப்படையிலான மென்பொருளை இந்நிறுவனம் வடிவமைத்து, உருவாக்கி, வழங்கி வருகிறது.
நவீன உலகத்தை உருவாக்கும் மிக முக்கியமான திட்டங்களை உள்ளடக்கிய வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த தளம் சேவை செய்கிறது.கட்டுமானம் என்பது இனி கான்கிரீட் மற்றும் எஃகு (ஸ்டீல்) ஆகியவற்றை மட்டுமே கொண்ட ஒரு துறை இல்லை என்று இந்நிறுவனம் நம்புகிறது. இது தரவுகள், முடிவுகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு துறையாகும். இந்நிறுவனத்தின் பணி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும், இதன் முக்கியப் பங்குதாரர்கள் சிலிக்கான் வேலியில் தொடங்கி துபாய் வரையிலும், சிங்கப்பூரில் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம் வரையிலும் உலகப் புகழ்பெற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். பல முக்கியமான உலகளாவிய காப்புரிமைகளை இந்நிறுவனம் வைத்துள்ளது. 'பொறுப்புடன்கூடிய நுண்ணறிவு' என்ற ஒற்றை, உறுதியான கொள்கையின் வழிகாட்டுதலோடு, இந்நிறுவனம் கட்டுமானத் துறையை டிஜிட்டல் மயமாக மட்டும் மாற்றவில்லை, அதை புதிதாக மறுவடிவமைப்பு செய்கிறது. அதாவது, கட்டுமானம் 1.0 என்பதிலிருந்து கட்டுமானம் 2.0-க்கு கொண்டு செல்கிறது.

















