செய்திகள் :

Flipkart: உணவு டெலிவரி சேவையில் இறங்கும் ஃபிளிக்கார்ட்; விரைவில் தனி செயலி அறிமுகம்; பின்னணி என்ன?

post image

தற்போது ஃபிளிப்கார்ட் வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை மற்றும் டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது.

புத்தக விற்பனையிலிருந்து தொடங்கி பயணச் சேவைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை எனப் ஃபிளிப்கார்ட் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

அடுத்தகட்டமாக உணவு டெலிவரியில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இது குறித்து ஃபிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தங்கள் நிறுவனம் ஒரு முன்னோட்டத் திட்டமாக உணவு விநியோகத் துறையில் களம் இறங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்யான் கிருஷ்ணமூர்த்தி
கல்யான் கிருஷ்ணமூர்த்தி

அவர் மேலும் கூறுகையில், ''சந்தை நிலவரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எதுவும் முடிந்துவிடவில்லை. வரலாற்றைப் பார்த்தால் குறிப்பாக நமது துறையில் யாரோ ஒருவர் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவார், மற்றொருவர் சந்தை முறையை மாற்றி அமைப்பார்.

இறுதியில் சந்தை விரிவடையும். புதிய நிறுவனங்கள் சந்தைக்கு வந்துகொண்டேதான் இருக்கும். இந்தியாவின் இ-காமர்ஸ் தொழில் நீண்ட தூரம் வந்துள்ளது. எண்ணிக்கை தற்போது கோடிக்கணக்கில் உள்ளது. இது ஆரம்பத்தில் புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள், பின்னர் சில பிராண்டட் எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிராண்டட் ஃபேஷன் ஆகியவற்றில் விரிவடைந்துள்ளது.

யாராவது ஒரு குறிப்பிட்ட தொழிலையோ அல்லது வணிக மாதிரியையோ தொடங்கினாலும் பரவாயில்லை, இரண்டு ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது வந்தாலும், அவர்கள் நன்றாகச் செயல்பட்டால், அவர்கள் கவனம் செலுத்தினால், அவர்கள் எளிதாக வெற்றி பெறலாம்," என்று தெரிவித்தார்.

இந்தச் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன், முதலில் இதனை பெங்களூருவில் தொடங்க ஃபிளிப்கார்ட் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சியைத் தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக தனி மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. உணவு விநியோகச் சந்தையில் Zomato சுமார் 57 சதவீதப் பங்கையும், Swiggy 43 சதவீதப் பங்கையும் கொண்டிருந்தன.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்கத்தில் திளைக்கும் ஆடி தங்கத் திருவிழா!

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான க... மேலும் பார்க்க

ஹோல்சேல் ரேட்டில் தங்கமா? தமிழ்நாட்டு மக்களுக்கு ஆச்சரியம் தரும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது ... மேலும் பார்க்க

`வீழ்ச்சியில் இருந்த கணவரை மீட்டேன்' - கட்டுமானத்துறையில் கலக்கும் மும்பை தமிழ்ப்பெண் ராமலம்மாள்

பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் மட்டும் பெண்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. தங்களாலும் சாதிக்க முடியும... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்; மகிழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் - என்ன காரணம்?

இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது... மேலும் பார்க்க

Prominence : "ஷாருக்கானிடம் ஐடியாவைச் சொன்னோம்; அவரும் கை கோர்த்தார்" - நிர்வாக இயக்குநர் நந்தகுமார்

சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் Prominence Home works என்ற வீட்டு பணிகளுக்கான Interior design modular company-யின் சென்னையில் இரண்டாவது கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டது.இதன் முதல் நிகழ்வாக pr... மேலும் பார்க்க

'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம்

கடந்த மே மாதம், அமெரிக்காவில் அதானி மற்றும் அதானி குழுமத்தின் மீது தொடர்ந்திருந்த மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரியது அமெரிக்க நீதித் துறை. இந்த வழக்குகள் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் காலத்தில் ... மேலும் பார்க்க