செய்திகள் :

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

post image

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் தனி முகாம் நடத்தி பாதிக்கபட்டவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வருகிறது காவல்துறை. தற்போது 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லட்சகணக்கில் பணத்தை இழந்தாகப் புகாரளித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய நபர்களான ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமறைவான நிலையில் 20 ஏஜெண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டுள்ளனர். மேலும், 13 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த மோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசுவின் உடலை மீட்டு கொண்டு செல்லும் ஊர்மக்கள்
ராசுவின் உடலை மீட்டு கொண்டு செல்லும் ஊர்மக்கள்

இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரும் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவரை நம்பி காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த பலரும் FQL-ல் பணத்தை முதலீடு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது

மேலும் ராசுவும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் ஏமாந்ததோடு இவரை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த ராசு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டம் மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்டம் மக்கள்

இந்நிலையில் ராசுவின்  உடலுடன் அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையறிந்து வந்து காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முடியவில்லை என்பதால் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க