செய்திகள் :

Gold: நகை வாங்குவதற்கும் சரி, முதலீடு செய்வதற்கும் சரி இதுதான் சூப்பர் நேரம்; ஆனால்...?

post image

இந்திய சந்தையிலும் சரி... சர்வதேச சந்தையிலும் சரி, தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது தங்கம். வெள்ளியோ ஒரு அவுன்ஸிற்கு 60 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,140. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,05,120. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.230.

தங்கம்
தங்கம்

ஈரான் போருக்குப் பின்னே, தங்கம், வெள்ளி விலை சரிந்துதான் வருகிறது. ஆனால், இப்போது வர்த்தகம் ஆகும் தங்கம், வெள்ளி விலை என்பது டிரேடர்களுக்கு நல்ல சான்ஸ்.

இனி அடுத்தடுத்து தங்கம், வெள்ளியில் நிலையற்றத் தன்மை அதிகம் இருக்கும். இந்த வாய்ப்பை டிரேடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தங்கம் என்பது பவுனுக்கு ரூ.1.34 லட்சம் சென்ற நாள்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இப்போது ரூ.1.05 லட்சத்திற்கு இறங்கியுள்ளது.

தங்க நகை வாங்கலாமா?

தங்க நகை வாங்குவதற்கும் இது நல்ல நேரம்தான். ஆனால், அந்நிய செலாவணிக்காக இந்தியப் பிரதமர் மோடி ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால், தேவைக்கான தங்க நகைகளை வாங்குவதற்கு மட்டும் தங்கத்தின் பக்கம் நமது பணத்தை எடுத்துச் செல்லலாம்.

Gold: இப்போது குறையும் தங்கம் விலை; இதற்கான 3 காரணங்கள் என்னென்ன?

தங்கம் விலை தற்போது மீண்டும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,04,800... மேலும் பார்க்க

MCX Trading-ல் தங்கத்தை வாங்குவதா, விற்பதா - நீங்கள் முடிவு செய்வது எப்படி?

தங்கத்தை நகையாக வாங்காமல், டிரேட் செய்யுங்கள்... எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யுங்கள் என்பது பொருளாதார நிபுணர்களின் அட்வைஸாக இருக்கிறது. தங்கம் டிரேடில் ஒரு வகை தான் - MCX தங்கம் வர்த்தகம். ஆனால், அதை ச... மேலும் பார்க்க

தங்கம் விலை Normal ஆக இருக்கிறதா, Over valued ஆக இருக்கிறதா? - நீங்களே கணக்கு போட்டு பார்க்கலாம்!

கடந்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை பீக்கில் இருந்தது. இப்போது சரிவில் இருக்கிறது. இப்படி தங்கம், வெள்ளி விலை ஏறும் போதும், இறங்கும் போதும், தங்கம் சரியான மதிப்பு உடன்தான் வர்த்தகமாகிறதா என்று எப்போதாவது ... மேலும் பார்க்க

Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்?

கச்சா எண்ணெய் விலை ஏறினால், தங்கம், வெள்ளி விலை குறைகிறது... கச்சா எண்ணெய் விலை சரிந்தால், தங்கம், வெள்ளி விலை ஏறுகிறது - ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச சந்தையின் பேட்டர்ன் இதுதான். இப்போதும்... மேலும் பார்க்க

Gold: மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,800; காத்திருக்கிறது சூப்பர் வாய்ப்பு! - எப்படி?

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 3,000 டாலருக்குக் கீழ் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 4,100 டாலர்களைத் தாண்டி உள்ளது. இதனால், தற்போது இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏறியுள்ளது. சென்... மேலும் பார்க்க

Gold: தங்கம் விலை ஏன் தொடர்ந்து சரிகிறது? - இப்போது ETF-களை விற்றுவிடலாமா?

தங்கம் விலை தற்போது நல்ல வீழ்ச்சியில் உள்ளது.இன்று சென்னையில் தங்கம் (22K) விலை ஒரு கிராமுக்கு ரூ.13,100 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,04,800 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில் இந்த வீழ்ச்சிக்கு கார... மேலும் பார்க்க