செய்திகள் :

Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

post image

முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார்.

அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல.

ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?

கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம்.

புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது.

கிரீன்லேண்ட்
கிரீன்லேண்ட்

அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும்.

இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம்.

இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம்.

அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம்.

அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை.

கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார்.

கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம்.

இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

NATO
NATO

கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..!

தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது.

அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர்.

இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார்.

வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார்.

ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம்

இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள்.

Davos அஜென்டா

தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!' – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற... மேலும் பார்க்க

NDA கூட்டணி: "நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்" - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்ப... மேலும் பார்க்க

`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி... மேலும் பார்க்க

"அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.... மேலும் பார்க்க

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!" - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பி... மேலும் பார்க்க

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்கள... மேலும் பார்க்க