செய்திகள் :

Ilaiyaraaja: 'எப்பவும் நான் ராஜா'; கார்த்திக் சுப்புராஜ் டு மாரி செல்வராஜ் - இளையாராஜாவின் லைன் அப்

post image

இளையராஜா இசையமைத்திருக்கும் 'டோரதி' படத்தின் பாடல்கள்தான் இப்போது சார்ட்பஸ்டர். இந்தப் படத்தின் பாடல்களை அவரே எழுதியும் இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் இந்த 'டோரதி', மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி', தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' என அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் படங்களுக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்! அவருடைய லைன் அப் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா...

இளையராஜா
இளையராஜா

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இளையராஜா இணையும் முதல் படம் இதுதான். செப்டம்பர் 11-ஆம் தேதி இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 25-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இதே தேதியில், அறிமுக இயக்குநர் டி.டி. பாலாசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'லெனின் பாண்டியன்' திரைப்படமும் வெளியாகிறது. இப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும், 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஜ் பி. ஷெட்டி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகிவரும் 'பாக்கெட் நாவல்' படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தலஜிக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் இது.

பிறகு, எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஏ. முத்தரசன் நடித்துள்ள 'அரிசி' திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ராப் பாடகர் வேடனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

இத்துடன், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், பிரியங்கா மோகன், காயடு லோஹர் நடிப்பில் உருவாகவிருக்கும் 'மஞ்சணத்தி' திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைப்பாளராகக் கமிட் ஆகியிருக்கிறார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க