செய்திகள் :

IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்

post image

நெதர்லாந்து அணியுடனான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே காணாத அணியாக இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “டாஸ் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களின் திட்டம். அதன்படி 190 ரன்கள் சேர்த்தோம். பின்னர் பந்துவீச்சுக்கு வந்தபோது சற்று பனி இருந்தது. அது பவுலர்களுக்கு சவாலாக இருந்தாலும், முடிவில் இந்த வெற்றி எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது.

பனி இருக்கும் நிலையிலும் முதலில் பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சிதான். அடுத்த போட்டியிலும் இதே மாதிரியான சூழ்நிலை இருக்கலாம். ஆரம்பத்தில் சற்று மெதுவாக தொடங்கினாலும், மிடில் ஓவர்ஸில் விக்கெட் எப்படி நடக்கிறது என்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டு பொறுப்புடன் ஆட வேண்டும். அதன்பிறகு ஹார்திக், சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ‘ஃபினிஷ்’ செய்ய தேவையான ஃபயர்பவர் எங்களிடம் இருக்கிறது.

துபே பற்றி...

துபே பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த இன்னிங்ஸ் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் அருமையாக ஆடினார். அப்போது ஆட்டநாயகன் விருது கை நழுவியது. ஆனால் இன்றைய போட்டியில் மிடில் ஓவர்ஸில் அவர் ஆடிய விதம், அனைவரின் அழுத்தத்தையும் குறைத்தது. இந்த விக்கெட்டில் 190 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோர்.

‘அனைத்து பெட்டிகளும் டிக் ஆனதா?’ என்று கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் சரியாக நடந்திருக்கலாம். ஆனாலும், வெற்றி பெற்ற போட்டியில்கூட கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கும். நாளை ஓய்வு எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி குழுவாக பேசுவோம்.

இனிய தலைவலி

பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான். மிடில் ஓவர்ஸில் அபிஷேக் சர்மா, ஹார்டிக், துபே என பலர் இருக்கிறார்கள். விக்கெட் எதை கேட்டாலும், அந்த நாளுக்கு ஏற்றார் போல சில ஓவர்கள் போட அவர்கள் உதவுவார்கள்.

என் ஃபார்ம் பற்றிப் பேசினால், அனைத்தும் சரியான திசையில் போகிறது. முக்கியமாக, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பங்களிப்பு கொடுக்கிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும் – சிறிய சிறிய கூட்டணிகள். போட்டி இறுக்கமாக இருக்கும் நேரத்தில் ஒருவர் சிறப்பாக ஆடினாலும், நல்ல ஸ்கோருக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியம்.” என்றார்.

IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்,ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது,“இந... மேலும் பார்க்க

T20 WC: வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்: தோல்வியே சந்திக்காத அணியாக சூப்பர் 8-க்குள் நுழைந்த இந்தியா

இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத அண... மேலும் பார்க்க

T20 : 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா - சாம்பியன் அணி வீழ்ந்தது எங்கே?

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா என்றாலே ஒரு மிரட்டலான அணி என்ற பிம்பம் உண்டு. ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அந்த அணி, சமீபகாலமாக டி20 போட்டிகளில... மேலும் பார்க்க

BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?

ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி... மேலும் பார்க்க

T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறி இருக்கிறது. கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த... மேலும் பார்க்க

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! - வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு மு... மேலும் பார்க்க