செய்திகள் :

T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே?

post image

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறி இருக்கிறது.

கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

தொடரின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சறுக்கியது எங்கே?

தொடரின் ஆரம்பத்திலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சந்தித்த தோல்விதான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

இரண்டாவது போட்டியில் அயார்லாந்து அணியிடம் வெற்றி பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வாழ்வா-சாவா என்ற நிலையில் இலங்கையை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் குவித்தும் பந்துவீச்சில் கோட்டை விட்டது.

பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெளியேறிய ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது.

ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

காரணங்கள் என்ன?

முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மற்றொரு அனுபவ வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததும் அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தியது.

கடந்த 2021-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, இந்த முறை சூப்பர்-8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?

ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி... மேலும் பார்க்க

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! - வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு மு... மேலும் பார்க்க

`ஆஸ்திரேலியாவை சிதறடித்த `அசல்' சம்பவக்காரன்' - யார் இந்த பதும் நிசாங்கா?

டி20 உலகக்கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இல... மேலும் பார்க்க

SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே... ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை' - சாடிய அக்தர்

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கட... மேலும் பார்க்க

'எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த சின்னசாமி மைதானம்தான்!' - டிராவிட் நெகிழ்ச்சி

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், "சின்ன... மேலும் பார்க்க