செய்திகள் :

திமுக - காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணிக்குள் இடம்பெற்றிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் திமுக- காங்கிரஸ் மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் - திமுக

அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் சமயத்தில் இது போன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். முரண்கள் எழும்.

திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதுதான் நிகழ்கிறது. ஆனால் இறுதியில் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்.

இதனால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பலவீனமானக் கூட்டணியில் போட்டி அதிகமாக இருக்காது. அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை இருக்காது.

பலமுள்ள கூட்டணியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான போட்டி எழும்.

அதிகாரப் பகிர்வு தேவை என்கிற அந்தக் கருத்தும் எழும். இவ்வாறு சலசலப்பு எழுவதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம், திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது, ஆட்சிக்கு வரப்போகிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக என்ன முயற்சியை மேற்கொண்டாலும், என்ன சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டங்களைத் தீட்டினாலும், அவர்களால் இங்கே வெல்ல முடியாது.

அவர்கள் கணக்குத் தப்புக் கணக்காகத்தான் முடியும். தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட, வேறுபட்ட ஒரு மண். இந்திய மாநிலங்களில் இருந்து வேறுபட்ட ஒரு மண் என்பதை இந்தத் தேர்தலின் மூலமும் மீண்டும் அவர்கள் உணர்வார்கள்" என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

"தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது" - திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகள... மேலும் பார்க்க

கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்... மேலும் பார்க்க

குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!

திமுக - காங்கிரஸ் விரிசல்!கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி... கொள்கை கூட்டணி' என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது கூட்டணிக் கட்... மேலும் பார்க்க

பட்ஜெட் 2026: ``இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட்" - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, "மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ... மேலும் பார்க்க

மதுரை: மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னன் அதிமுக-வில் இணைந்தார்!

மதுரை மாவட்டத்தில் தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஒரு கால கட்டத்தில் கோலோச்சி வந்தார். அவருடன் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' - மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்... மேலும் பார்க்க