செய்திகள் :

IND vs NZ: "ஆட்டத்தை ஆரம்பிச்சது அர்ஷ்தீப்... முடிச்சு வச்சது கோலி!"- நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

post image

'இது எங்க கிரவுண்டு... எங்க ஏரியா' எனச் சொந்த மண்ணில் கான்பிடன்ட்டாக களமிறங்கியது நியூசிலாந்து. ஆனால், எதிர்முனையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைத்திருந்த திட்டமே வேறு! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடங்கியது. 'பும்ரா இல்லனா என்னப்பா... நான் இருக்கேன்!' என்பது போல் பந்துவீச்சில் மிரட்டினார் அர்ஷ்தீப் சிங். வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், கைல் ஜேமிசன் என 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து 185 ரன்களுக்குச் சுருண்டது.

கோலி

186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அடுத்து கைகோத்த கோலி – கில் ஜோடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. அப்போது 'இதோ வந்துட்டேன்' என்பது போல் மழை குறுக்கிட, டி.எல்.எஸ் முறையில் இலக்கு 32 ஓவர்களில் 143 ரன்களாக மாற்றப்பட்டது.

அன்ஷுல் கம்போஜ்

அதன் பிறகு திரையில் ஹீரோ என்ட்ரி கொடுப்பதுபோல் தொடங்கியது கோலியின் ஆட்டம்! 35 பந்துகளில் அரைசதம் விளாசி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 80வது அரை சதத்தைப் பதிவு செய்து 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். கில் 37 ரன்கள் எடுக்க, இருவரும் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலி வெளியேறியதும் டஃபி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திப் பரபரப்பைக் கூட்டினார். ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களும், அக்சர் படேல் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

இறுதியில் 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அன்ஷுல் கம்போஜ் தட்டிச் சென்றார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது!

ஆஸ்திரேலியாவின் `அதிரடி' ஆட்டக்காரன் - ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! - குட் பை மேக்ஸ்

'மேக்ஸ்வெல்' - எடுத்த முடிவுஅதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக "கிளேன் மேக்ஸ்வெல்" நிகழ்த்தி... மேலும் பார்க்க

IND Vs NZ: "கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம்!" – தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!

முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ... மேலும் பார்க்க

`யார் சாமி இவன்?'- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!

டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விராட் க... மேலும் பார்க்க

“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!

கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்... மேலும் பார்க்க

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ... மேலும் பார்க்க

“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ... மேலும் பார்க்க