செய்திகள் :

IND vs NZ: "சச்சின் சார் உடன் பேசிக்கொண்டே இருந்தேன்" - மீண்டு வந்தது குறித்து சஞ்சு சாம்சன்

post image

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.

இந்நிலையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்.

விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், "இது ஒரு கனவு போல இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2024 உலகக்கோப்பையை வென்ற போது, நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

அப்போதிருந்தே இப்படியொரு தருணத்துக்காக கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சோபிக்காத போது என்னுடைய கனவு மொத்தமும் சுக்குநூறாக உடைந்ததை போல உணர்ந்தேன். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.

மேலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் எனக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கொடுத்தார்கள். குறிப்பாக கடந்த சில மாதங்களாக சச்சின் டெண்டுல்கர் சார் உடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். நான் ஆஸ்திரேலியாவில் விளையாடாமல் இருந்தபோது அவரை தொடர்பு கொண்டு மனநிலையை பற்றி கேட்டேன்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். நேற்று கூட எனக்கு அழைத்து எப்படி உணர்கிறாய் என்று கேட்டார். அவரைப் போன்ற ஒரு பெரியவரின் வழிகாட்டுதல் கிடைப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம்.

இந்த வெற்றி எனக்கு மிகவும் பெரியது. இப்போது இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்று யோசிப்போம். மிகவும் நன்றி" என்று பேசியிருக்கிறார்.

"ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் எனக்கு.!" - கம்பீர் எமோஷனல்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்... மேலும் பார்க்க

IND vs NZ: "இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடியது, இருந்தாலும்.!"- நியூசி கேப்டன் சாண்ட்னர்

அகமதாபத்தில் (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் அணியின் தோ... மேலும் பார்க்க

IND vs NZ: "என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.!"- நெகிழும் சூர்யகுமார் யாதவ்

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம... மேலும் பார்க்க

IND vs NZ: "நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், ஏனென்றால்.!"- அர்ஷ்தீப் சிங்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஷ்தீப் சிங் மைதானத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். " நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். நான் வீசிய பந்து கொஞ்சம் அதிகமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி... மேலும் பார்க்க