செய்திகள் :

Ind vs SA: "அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்" - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா

post image

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்தியாவை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது.

சொந்த மண்ணில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

மறுபக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா மிளிர்கிறார்.

12 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தியிருக்கும் பவுமா அவற்றில் 11 போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறார். ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது.

ரோஹித் - கோலி
Rohit - Kohli

இவ்வாறிருக்க, நேற்று (நவம்பர் 30) முன்தினம் ராஞ்சியில் இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் சீனியர் வீரர்கள் ரோஹித் (57), கோலி (135) அமைத்த 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என முன்னிலையில் இருக்கும் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் ஷாஹீத் வீர் நாராயண் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட பவுமா, இந்திய வீரர்களான கோலி, ரோஹித் குறித்து பேசியிருக்கிறார்.

ராய்பூர் மைதானத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பவுமா, ``அந்த இரு வீரர்களையும் (ரோஹித், கோலி) அணியில் சேர்ப்பது அணியை வலுப்படுத்துகிறது.

தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சொன்னது போல், அவ்விருவரும் நிறைய அனுபவமும் திறமையும் கொண்டவர்கள். அது அவர்களின் அணிக்குப் பயனளிக்கும். இது எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.

ரோஹித் சர்மா - டெம்பா பவுமா
ரோஹித் சர்மா - டெம்பா பவுமா

2007 டி20 உலகக் கோப்பை என்று நினைக்கிறேன். ரோஹித்துக்கு எதிராக நாங்கள் (தென்னாப்பிரிக்கா) விளையாடினோம். அப்போது நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன்.

அவர்கள் அப்போதிருந்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக ஆடுவது எங்களுக்குப் புதிதல்ல. சில மோசமான முடிவுகளையும் கண்டிருக்கிறோம். அதேவேளையில் சில நல்ல முடிவுகளையும் கண்டிருக்கிறோம். இவையனைத்தும் இந்தத் தொடரைச் சுவாரஸ்யமாக்குகின்றன" என்று கூறினார்.

2007 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் பெரிய அளவில் இல்லாத தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அப்போது அந்த அணியில் 20 வயது வீரராக ஆடியிருந்த ரோஹித் தலைமையில் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத... மேலும் பார்க்க

``என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" - ஜடேஜா மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 ... மேலும் பார்க்க

``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை!" - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள... மேலும் பார்க்க

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க