செய்திகள் :

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

post image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொண்டுவர கோரிக்கை முன்வைக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் தூதரகங்களுக்கு வெளியே மனித உரிமைகள் குழு 'இரு நாடுகளுக்கும் நடந்து வரும் பதட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஊக்குவிக்க வேண்டும்" என்றக் கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

Nepal Rights Group Protests
Nepal Rights Group Protests

மனித உரிமைகள் மற்றும் அமைதி சங்கத் தலைவர் கிருஷ்ணா பஹாடி மற்றும் HURPES தலைவர் ரேணுகா பவுடெல் தலைமையில் இந்த போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது, "போரில் யாரும் வெல்ல மாட்டார்கள், மனிதகுலம் மட்டுமே தோற்கடிக்கப்படும்"

"பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் வருந்தத்தக்கது" - "அமைதியில் அனைவரும் வெற்றி பெறுவார்கள்" - "தெற்காசியாவை போர் இல்லாத மண்டலமாக மாற்றுவோம்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை போராட்டக்கரர்கள் ஏந்திச் சென்றனர்.

மற்றொரு புறம் இரு நாடுகளையும் கண்டிக்கும் வகையிலான பதாகைகளும் இருந்தன. உதாரணமாக "சிந்து நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது எவ்வளவு சட்டபூர்வமானது?" - "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியவர்களை பாகிஸ்தான் ஏன் பாதுகாத்தது?"

"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதத்தை வளர்க்கிறது?" போன்ற வாசகங்களும் இருந்தன. மேலும், இந்தப் போராட்டத்துக்கு இடையே இந்தியா அரசுக்கும் - பாகிஸ்தான் அரசுக்குமான கடிதங்கள் காத்மண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் வழங்கியது.

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க