My Lord: "முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ...
Interview: இதுவரை HR கேள்வி கேட்டது போதும்; இனி நீங்களும் அவரிடம் 'இந்த' கேள்விகளை கேளுங்க!
இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... 'என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?', 'ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?', 'ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' - இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை கேள்விக்கணைகளால் துளைப்பார்கள்.
ஹெச்.ஆர் கேட்ட கேள்விகள் போக, நாமும் அவரிடம் இன்டர்வியூவில் சில கேள்விகளைக் கேட்க வேண்டுமாம்.
'இது என்ன புதுசா இருக்கே?' டோனில் இந்த விஷயம் இருக்கிறது. அப்படி ஹெச்.ஆரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று பார்ப்போம்...

> ஏன் இந்த இடம் காலியானது?
> இந்த நிறுவனத்தின் கலாசாரம் என்ன?
> இந்த நிறுவனம், நான் வேலை செய்யப்போகும் துறை மற்றும் டீமின் அளவு என்ன?
> சம்பளத்தைத் தாண்டி, என்னென்ன பலன்கள் கிடைக்கும்? புரோமோஷன்கள் எப்படி நடக்கும்? போனஸ் பற்றி சொல்லுங்கள்.
> நான் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்?
> நான் இந்த ரோலில் நன்றாக வேலை பார்த்தால், அடுத்தடுத்து எனக்கு என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும்?
> இந்த நிறுவனத்தின் நிதி நிலை என்ன?
> முதல் 90 நாள்களில் என்னிடம் இருந்து என்னென்ன எதிர்பார்க்கப்படும்?
இந்தக் கேள்விகள் உங்களுடைய தெளிவான மனப்பான்மையையும், தன்னம்பிக்கையையும் காட்டுமாம். நோட் பண்ணிக்கோங்க மக்களே.




















