ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்து...
IPL 2026: "அவர் பந்துகளை அடிப்பதை எதிர்முனையில் இருந்து பார்ப்பது.."- சூர்யவன்ஷி குறித்து ஜெய்ஸ்வால்
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஜெய்ஸ்வாலும், சூர்யவன்ஷியும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சூர்யவன்ஷி குறித்து பேசிய ஜெய்ஸ்வால், "சூர்யவன்ஷியுடன் இணைந்து விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்.
அவர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் பந்துகளை அடிக்கும் விதத்தை எதிர்முனையில் இருந்து பார்ப்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் அணியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஓர் அணியாக மிகச்சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம்.
நாங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம், சரியான நேரத்தில் அதற்கான பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அடுத்தடுத்த போட்டிகளுக்காக நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்.
யாராவது சிறப்பாக விளையாடினால் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொள்வோம்.
நாங்கள் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுகிறோம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.




















