செய்திகள் :

IPL 2026: "உன்னால் முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால்..." - விமர்சனங்கள் பற்றி ஸ்ரேயாஸ்

post image

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

"என்னைச் சுற்றியுள்ளவர்கள், 'இந்தச் சூழலில் உன்னால் இதைச் செய்ய முடியாது, இது இயலாத காரியம்' என்று சொல்லும்போது, அதைக் கேட்பது எனக்குப் பிடிக்காது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்தே தீர வேண்டும் என்று நினைப்பேன். என்னை நானே அதிகமாக வருத்திக்கொண்டு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து அவர்கள் கூறுவது தவறென நிரூபிக்க முயற்சிப்பேன்.

குறிப்பாக காயங்களுக்குப் பிறகு, அந்த எண்ணமே என்னை முன்னோக்கி நகர்த்துகிறது. எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டபோது, 'இனி இவனால் பழையபடி விளையாட முடியாது' என்று சிலர் சொன்னார்கள். 'ஏன் என்னால் முடியாது?' என்று நான் எனக்கே கேள்வி கேட்டுக்கொண்டேன்.

காயத்திற்குப் பிறகு உங்கள் மனநிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். எதைக் கவனிக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதேபோல என்னால் 'ஷார்ட்-பால்' பிரச்னையைச் சரிசெய்யவே முடியாது என்று மக்கள் சொன்னார்கள். அது என்னைத் தூண்டிவிட்டது. சிறப்பாக விளையாடி அவர்கள் சொன்னது தவறு என நிரூபிக்க விரும்பினேன், அதற்காகக் கடுமையாக உழைத்தேன்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

முன்பெல்லாம், அத்தகைய பந்துகளில் ஒரு ரன் எடுக்கவோ அல்லது பந்தைக் கீழே தட்டிவிடவோதான் பார்ப்பேன், ஆனால் இப்போது என் மனநிலை மாறிவிட்டது. அந்தப் பந்து நான் அடிக்கும் தூரத்தில் வந்தால், அதை சிக்ஸருக்குப் பறக்கவிடுவேன்.

நான் பிரவின் ஆம்ரேயுடன் பயிற்சி செய்கிறேன். சிறுவயதிலிருந்தே அவருடன் இருக்கிறேன். அபிஷேக் நாயர் போன்ற பயிற்சியாளர்களுடனும் பேசி ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வேன்" என்று பேசியிருக்கிறார்.

IPL 2026: ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் போட்டிகள்; பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.ஐபிஎல் 2026 சீசன் விறுவி... மேலும் பார்க்க

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்... மேலும் பார்க்க

'கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை'- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) பரபரப்பான ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்த... மேலும் பார்க்க

CSK vs GT: "கணிக்க முடியாத பிட்ச், மந்தமான ஃபீல்டிங்" - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும்... மேலும் பார்க்க

LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" - லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற 'சூப்பர் ஓவர்' மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வ... மேலும் பார்க்க

CSK Vs GT: நான்கு வார காத்திருப்பு; 'தோனி விளையாடுவாரா?' - நிலவரம் என்ன?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்... மேலும் பார்க்க