`என்னை விடுங்க. குழந்தைகளை மட்டும்..' - பாம்பு கடித்தும் கதறிய தாய்; இரு குழந்தை...
IPL 2027 இல் இருந்து விலக காரணம் என்ன? டிராவிஸ் ஹெட் விளக்கம்
ஐபிஎல் 2027 தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் டிராவிஸ் ஹெட் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இருந்த மூன்று ஆண்டுகள் மிகச் சிறந்தவை. இந்தப் பயணத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது மிகவும் ஒரு கடினமான முடிவு.
எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இதுவே சரியான முடிவு எனக் கருதுகிறேன். எனது தற்போதைய சர்வதேச கிரிக்கெட் இலக்குகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்.

அணி உரிமையாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக வீரர்களுக்கும், அசைக்க முடியாத ஆரஞ்சு ஆர்மிக்கும் (ரசிகர்கள்) மிகப்பெரிய நன்றிகள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நான் கழித்த காலத்தை எப்போதும் சிறந்த நினைவுகளுடனும் நன்றியுணர்வுடனும் திரும்பிப் பார்ப்பேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள அனைவருக்கும் எதிர்காலத்தில் வெற்றிகள் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

















