செய்திகள் :

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது?

post image

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது.

இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் கலந்துகொள்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறதா என்பதே இன்னும் தெரியவில்லை.

ஈரான் தரப்பில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.

காலிபாஃப் பதிவு
காலிபாஃப் பதிவு

காலிபாஃப் பதிவு

இந்த நிலையில், முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில், "முற்றுகையிடுவது மூலமும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது மூலமும், பேச்சுவார்த்தை மேசையை ட்ரம்ப் தனது கற்பனையில் சரணடைவதற்கான மேசையாகவும், போரைத் தூண்டுவதை நியாயப்படுத்தவும் முயல்கிறார்.

அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரத்தில், போர்க்களத்தில் எங்களது புதிய வியூகங்களை வெளிப்படுத்த நாங்கள் தயாராகியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

`ஹோலோகிராம் டு ரோபோட்' - ஹைடெக் பிரசாரத்தில் கலக்கும் தவெக-வினர்!

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் நேற்று (20.04.2026) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ரோபோட்டுடன் இணைந்து வீதியோரங்களில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ரோபோட்டின் கழுத்தில் கட்சிக... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

'ஒரு தொகுதியில் ஒரே பேர்ல 10 வேட்பாளர்கள் இருந்தாலும் குழப்பம் இருக்காது' - தேர்தல் ஆணைய ஏற்பாடுகள்

இன்னும் இரண்டு நாள்களில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு வசதியாக தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள சில ஏற்பாடுகள் குறித்து பார்ப்போம்.1. செல்போன்களுக்கென டோக்கன் வசதி:பொதுவாக வ... மேலும் பார்க்க