`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி
Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள்.
நெறிமுறைகள்:
5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது.
கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள்.
அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள்.
அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள்.
உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள்.

















