செய்திகள் :

Jana Nayagan: "இந்த சமயத்தில் 'ஜனநாயகன்' படத்தை என்னால் கொண்டாட முடியவில்லை!" - ரேச்சல் ரெபேக்கா

post image

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார்.

Jana Nayagan Movie
Jana Nayagan Movie

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் 'ஜனநாயகன்' படத்தைக் கொண்டாட முடியவில்லை எனப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "மாணவர்கள் போராட்டம் போய்க்கொண்டிருக்கும்போது படம் வெளியாகியிருப்பதை என்னால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை.

என் மனது முழுவதும் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுடன்தான் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை என்னால் முழுமையாகக் கொண்டாடவோ, என்ஜாய் பண்ணவோ முடியவில்லை.

விஜய் சாருக்கு 'முதலமைச்சராக இது முதல் படமா?' என எனக்கு அப்படிப் பார்க்கத் தெரியவில்லை. அதில் நடிகர் விஜய்தான் நடித்திருக்கிறார். அதனால் இதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. திரைத்துறை மூலம் ஏதேனும் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

Raichal Rabecca - Thaai Kizhavi Movie Still
Raichal Rabecca - Thaai Kizhavi Movie Still

என்னைப் பார்த்து நிறைய பெண்கள் தங்களோடு ஒப்பீடு செய்துகொள்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தரும் வகையில், அவர்கள் தங்களையே அதில் பிரதிபலித்துப் பார்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

அதேபோலப் பெண்களுக்கு முக்கியமான கருத்துகளைக் கடத்தும் கதைகளைத் தேடித் தேடி நடிக்க விரும்புகிறேன்.

உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆழமான கருத்துகள் கொண்ட கதைகளிலும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தைப் பேசும் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை" எனக் கூறியிருக்கிறார்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க