செய்திகள் :

Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' - நடிகர் அருண்

post image

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்' தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் 'இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே' எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந்தித்து வருகின்றன.

இந்தச் சூழலில் இந்தப் படத்தில் நடித்த சீரியல் நடிகர் அருணிடம் பேசினோம்.

அருண் காட்சிகள் படத்தில் இடம் பிடித்து முகம் பதிவாகி இருப்பதால் இரண்டு நாட்களாக அவருக்கு ஏகப்பட்ட போன் கால்கள், பாராட்டுகளாம்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்

''டிவியில ரொம்ப வருஷம் இருந்தாலும் சினிமா பக்கம் வராமலே இருந்துட்டேன். சிரீயல்லயே நேரம் சரியா இருந்ததும் ஒரு காரணம். ஆனா முதல் சினிமா வாய்ப்பா தளபதி படம் க்ளிக் ஆன அந்த நிமிடம் இப்ப நினைச்சாக் கூட ஜிலீர்னு இருக்கு.

எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கும், எப்ப அவரைப் பார்ப்போம்னு ரொம்ப எதிர்பார்ப்பா இருந்தேன், அந்த நாட்களும் வந்தன. என்னை நானே கிள்ளிப் பார்த்துகிட்டே ஷூட்டிங் போய் வந்தேன்.

அவர் எங்கிட்ட பேசிய வார்த்தைகளும் பதிலுக்கு நான் பேசிய வார்த்தைகளும் மனசுல ரெக்கார்டு பண்ணி வச்ச மாதிரி அப்படியே இருக்கு.

எனக்கு முதல் படம்கிறதால முக்கியமான தருணம். அவருக்கோ அரசியல் என்ட்ரி, கடைசிப் படம்னு எதிர்ப்பு ரொம்பவே எகிறி இருந்தது. போதாக்குறைக்கு தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்துக்கு சிக்கல மேல சிக்கலை சிலர் உண்டாக்க, டைட்டில் கார்டுல முதலமைச்சர்னு போட்டே வந்திடுச்சு.

தமிழ்நாட்டின் முதலமைச்சருடன் சேர்ந்து நடிச்சிட்டேன். அதுவும் அவருடன் டயலாக்கெல்லாம் பேசியிருக்கேன்ங்கிறதை நினைக்கிற போதே ஏதாவது உயரமான இடத்துல இருந்து உரக்கக் கத்தணும் போல இருக்கு.

சினிமாவுக்காக கால் நூறாண்டு காத்திருந்திருக்கேன். பலர் பல தடவை சினிமா வாய்ப்பு வரலையானு கேட்டிருக்காங்க.. சினிமா பண்ணலையானு கேப்பாங்க. சிலர் அக்கறையோட கேப்பாங்க. சிலர் உன்னையெல்லாம் யார் அங்க கூப்பிடப் போறாங்கங்கிற டோன்ல கேப்பாங்க. அவ்வளவு வலி தரும். ஆனா இந்த ஒரு படம் போதும். வலி பறந்து போயிடுச்சு. வெற்றி கொண்டானால் வெயிட்டான அறிமுகம் கிடைச்சிருக்கு. அதுக்காக அந்த ஆண்டவனுக்கும் இப்ப ஆள்றவருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்' என உற்சாகம் பொங்கப் பேசினார் மனித‌ர்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க