உங்கள் கோலத்துக்கு 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு! - கோலம் போடுங்க பரிசை வெல்லுங...
Jana Nayagan Audio Launch: கோட் சூட்டில் விஜய்; தளபதி பாய்ஸ் பங்கேற்பு; ஆடியோ லாஞ்ச் அப்டேட்ஸ்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இசை வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு மேல் தொடங்கவுள்ள நிலையில், தற்போது விஜய் நடித்த படங்களின் பாடல்களை வைத்து 'தளபதி கச்சேரி' என்ற கான்சர்ட்டை நடத்தி வருகிறார்கள்.
இது விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் இப்படியான சிறப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.
இந்த 'தளபதி கச்சேரி' கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களோடு சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து நிகழ்வுக்குப் புறப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
'தளபதி கச்சேரி' கான்சர்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விஜய்யும், வி.ஜே. ரம்யாவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.


















