Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்ட...
JanaNayagan Audio Launch: "'ஜனநாயகன்' தளபதிக்கு எண்ட் கிடையாது, இதுதான் பிகினிங்!" - அ. வினோத்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் அ. வினோத் மேடையில் பேசுகையில், "'ஜனநாயகன்' படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கு.
'ஜனநாயகன்' ஒரு ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கும், பாதிதான் ரீமேக், மற்றது புது கதை என்ற குழப்பத்திலிருப்பவர்களுக்கும், படம் முன்ன பின்ன இருக்கிற மாதிரி இருக்கே, உள்ள புகுந்து அடிச்சிடலாமானு யோசிக்கிறவங்களுக்கும் நான் சொல்ல விரும்புற விஷயம் ஒன்றுதான்! இது தளபதி படம்.

உங்க எண்ணத்துல எதுவாக இருந்தாலும் அதை அழிச்சிட்டு வாங்க. 100 சதவீதம் எண்டர்டெயினிங் படத்தை பார்க்க வாங்க. நீங்கள் ஆடி, பாடி கொண்டாடுவதற்கு படத்தில் பல தருணங்கள் இருக்கு.
அமைதியாக உட்கார்ந்து யோசிப்பதற்கும் மொமென்ட்ஸ் இருக்கு. படத்துல கடைசி 15 நிமிஷம் ஃபேர்வெல் இருக்கு.
அழுக வைக்கிற காட்சிகள் இருக்குனு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. படத்துல அழுகாட்சியும் கிடையாது. படத்தோட முடிவுல நம்பிக்கைதான் இருக்கு. ஏன்னா, தளபதிக்கு இது எண்ட் கிடையாது. இதுதான் பிகினிங்!" எனப் பேசினார்.















