'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்...
JanaNayagan Audio Launch: "விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது?" - சரண் பதில்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திருவிழா' என்ற கான்சர்ட்டையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த கான்சர்ட்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள்.
பின்னணிப் பாடகர்கள் பலரும் மேடையில் பாடல்களைப் பாடிய பிறகு விஜய் குறித்தும், அவர்கள் பாடும் பாடல்கள் குறித்தும் பேசி வருகிறார்கள்.
அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், "இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம்" எனப் பேசினார்.

"விஜய் - எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்?" எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், "பாடல்னுதான் நான் சொல்லுவேன்.
ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன்.
ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம்" எனப் பேசினார்.


















