செய்திகள் :

Kara: மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா?- தனுஷ் அளித்த பதில் என்ன?

post image

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கர'.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'கர' படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், " இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது.

கர - தனுஷ்
கர - தனுஷ்

இது மக்களாகிய உங்களின் படம். நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படம் தான் 'கர' . இது மக்களுக்கான படம். ரிலீஸுக்கு முன்பு நான் ரொம்ப நம்பிக்கையுடன் சில படங்களை பற்றி பேச மாட்டேன்.

இந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள். இந்தப் படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் தங்களை திரையில் பார்ப்பது போன்று இருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை கண்ணுக்கு தெரியும்.

அந்த வலி தெரியும், அதற்கான தீர்வு தெரியும். அதற்கான வெற்றி தெரியும். அதை நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்லலாம்" என்று பேசியிருக்கிறார்.

நடிகர் தனுஷ்
தனுஷ்

இதனைத்தொடர்ந்து மூத்த மகன் யாத்ரா விரைவில் சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா? என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். அவனுக்கு இப்போதுதான் 19 வயதாகிறது, இன்னமும் அவன் எனக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிகிறான். அவன் என்னவாகப் போகிறான் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

'60 வயதோ, 16 வயதோ' - போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் !

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார்.பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப்... மேலும் பார்க்க

GV Prakash: "கோடிக்கணக்கில் பணம் தந்தாலும் மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" - ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 'கர' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன... மேலும் பார்க்க

Youth: "உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்" - ரிஷப் ஷெட்டியைச் சந்தித்த கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்... மேலும் பார்க்க

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர... மேலும் பார்க்க

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமா... மேலும் பார்க்க

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க