செய்திகள் :

Keerthy Suresh: ``ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்" - நடிகை கீர்த்தி சுரேஷ்

post image

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தொடர் 'அக்கா'. கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடித்திருக்கும் இந்த சீரிஸ் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியானது. இந்த சீரிஸின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே கலந்துகொண்டனர். அப்போது, நடிகை ராதிகா ஆப்தே, ``நான் நடித்த ஒரு தெலுங்குப் படத்தில் என் தாய்மாமாவையே திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு மிகவும் சவாலான படமாக இருந்தது. அந்தப் படத்தில் இருந்த எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. வயதில் மிகவும் மூத்த ஒரு நடிகருடன் நான் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.

ராதிகா ஆப்தே - கீர்த்தி சுரேஷ்
ராதிகா ஆப்தே - கீர்த்தி சுரேஷ்

அது மிகவும் ஆணாதிக்கம் நிறைந்த சூழலாகவும் இடமாகவும் இருந்தது. எனக்கு அதுவே மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. பின்னர் படத்தின் பாதியிலேயே நான் இறந்துவிடுவேன். அவர் என்னைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சண்டையிடுவார். ‘நான் எப்போது சாவேன்?’ என்றுதான் எனக்குத் தோன்றியது” என்று தென்னிந்திய திரையுலகம் குறித்த தன் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

அப்போது அருகிலிருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்துக்கொண்டே, “தமிழ் மற்றும் தெலுங்குக் கலாசாரத்தில் மாமாவைத் திருமணம் செய்துகொள்வது மிகவும் சகஜமான ஒன்று” என்று கூறியது ரசிகர்களிடையே விவாதமானது. சிலர் கதையையும் கதாநாயகனையும் தெரிந்துகொண்டுதானே ஒப்பந்தமானார், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இதை விமர்சிக்கிறார் என்ற கேள்விகளும் எழுப்பினர்.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒருபகுதியான நிகழ்ச்சியில் இந்தச் சர்ச்சை குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், ``ராதிகா அந்தக் கருத்தைச் சொன்னபோது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் என்ன பேசுகிறார் என்பதே எனக்கு முதலில் புரியவில்லை. ‘என் மாமாவுடன் நான் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது’ என்று அவர் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகே அவர் நம் கலாசாரத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். தென்னிந்தியக் கலாசாரத்தைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தவுடன், அது இங்குள்ள ஒரு பாரம்பர்ய வழக்கம் என்பதை அவருக்கு விளக்க முயற்சித்தேன். கேரளாவில் அந்தக் கலாசாரம் கிடையாது என்பதால், இங்குள்ள கலாசாரத்தைக் குறிப்பிட்டே அவ்வாறு பேசினேன். மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன், நான் ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

OM: ``'ஓம்' என்று தலைப்பு வைக்கக் காரணம் இதுதான்"- ராஜ்குமார் பெரியசாமி

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. செம்மர கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை... மேலும் பார்க்க

Keerthy Suresh: ``அப்பா - பொண்ணு உறவுனு சொன்னது கேட்கலையா?"- விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந... மேலும் பார்க்க

'வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தை..!'- செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் விளக்கம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தே... மேலும் பார்க்க

"என் மூத்த மகள் விரும்பினால் அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார்" - நடிகர் அர்ஜுன் விளக்கம்

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்துகொள்ளாதது பேசுபொருளான நிலையில் தற்போது அதுகுறித்த... மேலும் பார்க்க

"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் காரணம் என்ன?

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

"'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன; அவைதாம் அந்தப் படத்தின் வெற்றி"- கீர்த்தி சுரேஷ்

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க