பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
Kerala: "Complete Non-Veg" வைரலான பதாகை; இணையத்தில் எதிர்வினைகள் என்ன?
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தின் அறிவிப்புப் பலகை தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அதில் வழக்கத்துக்கு மாறாக "நாங்கள் முற்றிலும் அசைவ உணவகம்" என எழுதப்பட்டிருந்தது.
@RishiJoeSanu' என்ற X பயனர் ஒருவர், அந்தப் பலகையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "சமூக ஊடகங்களில் 'சைவப் பிரியர்களால் (vegetarian engagement baiters)' மூலம் ஏற்படும் பெயர்க் கெடுதலைத் தவிர்க்க, சில 'மல்லு உணவகங்கள்' இப்போது வெளிப்படையாக 'அசைவ உணவகம்' என்ற அறிவிப்பைப் வைக்கத் தொடங்கியுள்ளன" என்று பதிவிட்டிருந்தார்.
இணையத்தில் பரவிய இந்த பதிவு, உணவுத் தேர்வுகள், பிராந்திய உணவு கலாசாரம், வெளிப்படைத் தன்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
வைரலான அறிவிப்பு பலகை
X தளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தில் இருந்த பலகையில், "நாங்கள் முற்றிலுமான அசைவ உணவகம்" என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அங்கே சைவ உணவுகள் வெறும் "வெரைட்டிக்காக மட்டுமே" கிடைக்கிறது என்றும், "இரண்டும் பொதுவான சமையலறையில் சமைக்கப்படுகிறது" என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
Mallu restaurants have begun displaying "Non-Vegetarian" signboards to avoid the reputational damage that comes from vegetarian engagement baiters on X. pic.twitter.com/wMLSrlO2WP
— Rishi | ഋഷി | (@RishiJoeSanu) November 17, 2025
இந்தப் பலகையை "சிறந்த உணவகங்களில் ஒன்று" என்று குறிப்பிடப்படும் பாரகன் (Paragon) என்ற உணவகத்தில் பார்த்ததாக அந்த X பயனர் குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து என்ன?
இந்த பலகை குறித்து பல்வேறு இணையதளவாசிகள் கமண்ட் செய்துள்ளனர். ஒருவர், வேறொரு உணவகத்தில் இருந்த "முழுவதும் அசைவம் (pure non-veg)" என்ற லேபிள் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "புனேவில் இது காலம் காலமாக நடந்து வருகிறது!" என்று குறிப்பிட்டிருந்தார்.
"உண்மையில் இது ஒரு நல்ல முயற்சிதான். மக்கள் சிந்தித்து முடிவெடுக்கலாம்," என்று ஒரு பயனர் எழுதியிருந்தார்.
மற்றொருவர், "இப்படித் தெளிவாக அறிவிப்பதுதான் சிறந்தது. சாப்பிடலாமா வேண்டாமா என்பது என் விருப்பம்," என்று இந்த வெளிப்படைத்தன்மையைப் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் இது பொதுவான சமையல் முறைதான் என்று ஒரு பயனர் சுட்டிக் காட்டினார். "மதுரையில் இதுதான் இயல்பு. சாதாரண மதுரைக் கடைகளில் சைவ உணவுகள் எதுவும் கிடைக்காது," என்றும் அவர் கூறியிருந்தார்.
சில வடஇந்தியர் சைவ பிரியர்கள் சிலர் தங்கள் உணவு பொது சமையலறையில் சமைக்கப்பட்டது தெரிந்தால் கோபமடைவார்கள் என்பதால் அவர்களுக்கான பதிலாக இது இருக்கலாம் என்றும் ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.













