SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! படமாக வ...
காசா: 7 கி.மீ நீளம், 25 மீ ஆழம், 80 அறைகள்; இஸ்ரேல் கண்டறிந்த ஹமாஸின் மர்ம சுரங்கம்!
இஸ்ரேலிய ராணுவத்தின் (IDF) அதிரடிப் படையினர், காஸா பகுதியில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். லெப்டினன்ட் ஹடார் கோல்டின் உடல், இந்தச் சுரங்கத்தில்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
லெப்டினன்ட் ஹடார் கோல்டின், 2014-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் போரின்போது காஸாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்த மாதம் தொடக்கத்தில்தான் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டது.

ஹடார் கோல்டின் உடல் வைக்கப்பட்டிருந்த சுரங்கம் குறித்த வீடியோவை, இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தச் சுரங்கம் மக்கள் நெருக்கமாக வசிக்கும் ரஃபா பகுதி குடியிருப்புகளுக்கு அடியிலும், UNRWA (ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பு) வளாகம், மசூதிகள், கிளினிக்குகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வழியாகவும் செல்வதாக IDF தெரிவித்துள்ளது.
இந்தச் சுரங்கத்தை ஹமாஸ் தளபதிகள், ஆயுதங்களைச் சேமித்து வைக்கவும், தாக்குதல்களைத் திட்டமிடவும், நீண்ட காலம் தங்குவதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
⭕️ EXPOSED: A 7+ kilometer Hamas tunnel route that held Lt. Hadar Goldin.
— Israel Defense Forces (@IDF) November 20, 2025
IDF troops uncovered one of Gaza’s largest and most complex underground routes, over 7 km long, ~25 meters deep, with ~80 hideouts, where abducted IDF officer Lt. Hadar Goldin was held.
The tunnel runs… pic.twitter.com/GTId75CvYw
Hamas சுரங்கம்: 7 கி.மீ, 80 அறைகள்!
இந்தச் சுரங்கம் ஏழு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், 25 மீட்டர் ஆழமும் கொண்டது என்றும், இதில் 80 அறைகள் உள்ளன என்றும் IDF கூறியுள்ளது. இந்த பிரமாண்டமான சுரங்கத்தை, யஹலோம் கமாட் இன்ஜினீயரிங் பிரிவு மற்றும் ஷயேடெட் 13 கடற்படை கமாண்டோ பிரிவைச் சேர்ந்த உயரடுக்குப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதிகளின் கமாண்ட் போஸ்ட்களாகப் பயன்படுத்தப்பட்ட அறைகளையும் இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதில், கடந்த மே மாதம் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருடன் கொல்லப்பட்ட முகமது ஷபானா பயன்படுத்திய அறையும் அடங்கும்.
காசா போரின் தற்போதைய நிலை
அக்டோபர் 2023-ல் தொடங்கிய காஸா போரின் சமீபத்திய தகவல்கள் இவை: வியாழக்கிழமை காஸா ஸ்டிரிப்பின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
கான் யூனிஸுக்குக் கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தில் ஒரு வீட்டின் மீது நடந்த தாக்குதலில், ஒரு குழந்தை, பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும், அருகில் உள்ள அபஸ்ஸான் நகரத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ ஊழியர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சுமார் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் நிறுத்தத்தை ஹமாஸும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் மீறியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.














