செய்திகள் :

"மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள்" - திமுகவுக்கு வேலுமணி அறிவுரை

post image

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

வேலுமணி
வேலுமணி

அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டால் நிவர்த்திசெய்து அனுப்ப வேண்டும். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.

மெட்ரோ
மெட்ரோ

தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மோடியிடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோவைக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பகட்ட பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. கோவையின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ செல்லும் வகையில் நாங்கள் திட்டமிட்டிருந்தோம். திமுக ஆட்சியில் வெறும் இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளனர்.

கோவை
கோவை

திமுகவில் 40 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள்தான் திட்டத்தைக் கேட்டு பெற வேண்டும். இங்கு போராடி என்ன பயன்? டெல்லி சென்று போராடுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கி திட்டத்தைப் பெறுங்கள்” என்றார்.

CIA: "போர் வந்தால் இந்தியா வெல்லும்" - பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி!

அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIAவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்ற அதிகாரி இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலத்தை ஒப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்கக் கூற... மேலும் பார்க்க

"அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி" - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். கோவ... மேலும் பார்க்க

``ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்!" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்ந... மேலும் பார்க்க

திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் த... மேலும் பார்க்க