செய்திகள் :

KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" - லஞ்ச ஒழிப்புத் துறை

post image

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது.

அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த எஃப்.ஐ.ஆரில் ஏ-1 ஆக கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறை சார்ந்த டெண்டர்களில் ஊழல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதாவது, டெண்டர் விடப்படுவதற்கு முன்பே, தங்களுக்கு வேண்டியவர்களை டெண்டர்தாரர்களாகத் தேர்வு செய்து, ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை ‘கட்சி நிதி (Party Fund)’ என்கிற பெயரில் லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

இந்த வழக்கில் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிசந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் வாட்ஸ்அப் சாட்கள், பணக் கணக்கீடுகள் ஆகியவைச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஊழல் மூலம் கிட்டத்தட்ட ரூ.1,020 கோடியை லஞ்சமாக கே.என்.நேரு பெற்றிருப்பதாக எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

இந்தக் எஃப்.ஐ.ஆரை இங்கே டவுன்லோடு செய்யலாம்.

"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காவல... மேலும் பார்க்க

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநி... மேலும் பார்க்க

லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை ... மேலும் பார்க்க

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" - உதயநிதி விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய... மேலும் பார்க்க

``கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" - உதயநிதி காட்டம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் ... மேலும் பார்க்க

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்ப... மேலும் பார்க்க