செய்திகள் :

Kriti Sanon: "நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்!" - கீர்த்தி சனூன்

post image

பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் தனது கருமுட்டைகளைச் சேமித்து வைத்திருப்பதாகச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Kriti Sanon
Kriti Sanon

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் என் கருமுட்டைகளை உறையவைத்துள்ளேன். அதை மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திட்டமிட்டுச் செய்தேன்.

'மீமி' (Mimi) திரைப்படத்திற்காக நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்த அந்தச் சமயத்தில்தான் இந்தச் சிகிச்சையையும் மேற்கொண்டேன்.

பொதுவாக, கருமுட்டை சேமிப்புச் சிகிச்சையின் போது உடலில் கடுமையான வீக்கம் ஏற்படும். எப்படியும் 'மீமி' படத்திற்காக நான் குண்டாகத்தான் வேண்டும் என்பதால், அந்த இரண்டு மாத ஷூட்டிங் பிரேக் இடைவெளியை இதற்குச் சரியான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் தான், 'உனக்காக நீயே கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு இதுதான்' என்று கூறி இந்த ஐடியாவைக் கொடுத்தார்.

Kriti Sanon
Kriti Sanon

ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த மாதிரியான உடல் உபாதைகளைச் சந்திப்பாரோ, அதே போன்ற ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வுதான் எனக்கும் இருந்தது. இருந்தாலும், இந்த முடிவை எடுத்ததில் எனக்கு முழு மன அமைதி கிடைத்துள்ளது.

என்னுடைய கரியரில் தேவையற்ற பதற்றமும் அழுத்தமும் என் மனதிற்குள் இருக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அதனால் தான் இந்த ஸ்மார்ட் பிளானிங்" எனக் கூறியிருக்கிறார்.

Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலரும... மேலும் பார்க்க

"நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து மகாராஷ்... மேலும் பார்க்க

``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான... மேலும் பார்க்க

'ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்' - சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெண் மும்பையில் மீட்பு

மும்பையில் பாலிவுட் நடிகர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையில் தினமும் ஏராளமானோர் மும்பைக்கு வந்துகொடிருக்கின்றனர். அது போன்று நடிகர் சல்மான் கானைச் சந்திக்க அசாமில் இருந்து மும்பை வந்து தெருக்களில் அநாதை... மேலும் பார்க்க

`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் துணையான கெளரி ஸ்ப்ராட் என்பவரை கடந்த 5ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அமீர்கானின் ... மேலும் பார்க்க

Kajal Agarwal: "அது தூக்கமற்ற இரவுகளைத்தான் தந்தது..!" - காஜல் அகர்வால் அதிர்ச்சி!

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம், உணவு கலப்படங்கள் பற்றிய விஷயங்களைப் பேசும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. The India Storyஇத்திரைப்படத்தின் கதையைக் கேட்டபோத... மேலும் பார்க்க