செய்திகள் :

Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" - மீண்டும் கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்!

post image

ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு கிருத்தி சனோன் அளித்த பதிலும் இணையத்தில் வைரல் ஆனது. ஒரு நகைக் கடை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி சனோன் மாடர்ன் உடையை அணிந்து நடித்திருந்தார்.

Kriti Sanon

இது பற்றி கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்றைய பெண்களுக்கு ஜீன்ஸ், புடவை, சுடிதார், பிகினி என எத்தனையோ ஆடை தேர்வுகள் இருக்கும்போது, ரக்ஷா பந்தன் போன்ற ஒரு பாரம்பரிய விழாவிற்கு சகோதரருக்கு ராகி கட்டும்போது ஏன் பிகினி போன்ற உடையில் வர வேண்டும்?

இந்த விளம்பரம் வேண்டும் என்றே தவறாக வடிவமைக்கப்பட்டது போல் இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிருதி சனோன், "பண்டிகைகளின் முக்கியத்துவம் நாம் அணியும் ஆடையில் இல்லை. அந்தப் பாரம்பரியத்தின் உணர்வுகளில்தான் இருக்கிறது.

பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? பண்பாடும் பாரம்பரியமும் இதயத்தில் இருக்க வேண்டுமே தவிர, உடைகளின் கழுத்துப்பகுதியில் அல்ல" எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கிருதி சனோனின் இந்த பதிலுக்கு தற்போது மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கங்கனா ரனாவத், "அவர் என்ன ஆடை வேண்டுமானாலும் அணியலாம், அவரை யார் தடுத்தது? இன்றைய நவீன பெண்ணுக்குப் பல ஆடை தேர்வுகள் உள்ளன.

ஆனால் பாரம்பரியமான ஒரு நிகழ்வின்போது எது பொருத்தமான ஆடை என்ற கேள்விதான் எழுகிறது" எனக் கூறியிருக்கிறார்.

இந்த ஆடை விவாதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவவே, சம்பந்தப்பட்ட அந்த நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. வைரம் பதித்த தங்க வளை... மேலும் பார்க்க

Hanuman Ansh: 'சின்ன கல்லு, பெத்த லாபம்' - பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஹனுமான் அன்ஷ்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பல கோடி ரூபாய் பட்ஜெட்டும் இல்லை; பெரிய விளம்பரங்களும் இல்லை. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பாராத வசூலைக் குவித்து பாலிவுட்டில் கவனம் ஈர்த்திருக்கிறது ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கர... மேலும் பார்க்க

`நான் பள்ளி படிப்பைகூட முடிக்காததை சிலர் கிண்டல் செய்யலாம்; ஆனால் அன்று.!" - நடிகை கரீனா கபூர்

பாலிவுட் திரை நடத்திரத்தில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். கடந்த 2000-ம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான 'ரெஃப்யூஜி' (Refugee) திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகத் தனது 19-வ... மேலும் பார்க்க

நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா தற்கொலை வழக்கு: CBIக்கு மாற்றம்; நீதிமன்றம் என்ன சொல்கிறது?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார... மேலும் பார்க்க

Nimisha Sajayan: "தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்..." - உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் 'பாபிதா சிங் ரிப்போர்ட்டிங்' திரைப்படத்திற்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார். Babita Singh Reporting இந்தப் படத்தின் கதாபா... மேலும் பார்க்க

"பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?"- கிருத்தி சனோன்

ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும் ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக வலைதளங்... மேலும் பார்க்க