செய்திகள் :

LIK: "என் படம் 100 கோடியைத் தொடலைன்னா..." - பிரதீப் ரங்கநாதன்

post image

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

'டிராகன்', 'லவ் டுடே', 'டியூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'LIK'
'LIK'

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், "நான் என்னோட ஃபேன்ஸ் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கூச்சப்படுவேன். ஏன்னா 'என்னடா அதுக்குள்ள உனக்கு ஃபேன்ஸா' என்று சொல்வாங்க.

ஆனா நான் போகிற இடமெல்லாம் அவர்கள் காட்டுகின்ற அன்பையும், ஆதரவையும் பார்த்துட்டு அவங்க பேரைச் சொல்ல நான் ஏன் கூச்சப்படணும் என்று தோணுச்சு. என்னோட ஃபேன்ஸ், உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி, நீங்க இல்லாம நான் இங்க இல்ல" என்று பேசியிருக்கிறார்.

தவிர ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரி ரிலீஸ் ஈவென்ட்டில் பேசிய பிரதீப் ரங்கநாதன், " 'LIK' என்னோட 2-வது படமாக ரிலீஸ் ஆக வேண்டிய படம். ஆனா CG வேலைகள் மற்றும் சில காரணங்களால் தாமதமாகிருச்சு.

இந்தப் படம் 100 கோடி வசூல் செய்தால் எனக்கு சந்தோஷம்தான், ஆனா அதுவே இப்போது எனக்கு ஒரு அழுத்தமாக மாறிருச்சு.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

இப்போதெல்லாம் என் படத்தோட குறைந்தபட்ச வசூலே 100 கோடிதான் என நிர்ணயிச்சுட்டாங்க. ஒருவேளை அது 100 கோடியைத் தொடலன்னா படம் தோல்வியாகிவிட்டதுன்னு சொல்லிடுவாங்க.

அதனால, வசூலை விட மக்களுக்கு இந்தப் படம் பிடிச்சிருந்தாலே எனக்கு பெரிய மகிழ்ச்சி" என்று பேசியிருக்கிறார்.

LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'டிராகன்', 'லவ் டுடே', 'டூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அன... மேலும் பார்க்க

Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில்

ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கி... மேலும் பார்க்க

LIK: "அப்போ 250 ரூபாய்தான் இருந்தது; அனிருத் 50,000 ரூபாயை என் பேக்ல வச்சிருக்கார்" - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத... மேலும் பார்க்க

LIK: "'டூட்' படத்தில அவர் நடிச்சது முதல்ல பிடிக்கல, ஆனா.!"- பிரதீப் ரங்கநாதன் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'லவ் டுடே', 'டிராகன்', 'டூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இப்படம் வெளியாகவிருக்கிறது.... மேலும் பார்க்க

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் என்ன? - வெளியான அறிவிப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் இதில் கஜோல், ... மேலும் பார்க்க